உயிர் தந்த கங்காபிஷேகம்

eknathji2

மகாராஷ்டிரா மகான் ஏகநாதர் கங்கை தீர்த்த பாத்திரத்தை காவடி போல தோளில் சுமந்து ராமேஸ்வரத்திற்கு சீடர்களுடன் புறப்பட்டார். ராம நாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது அவரது எண்ணம். அப்போது கோடை வெய்யில் கொளுத்தியது. காலணி அணியாத ஏக நாதருக்கு சூடு தாங்கவில்லை. அந்த வழியே ஒரு கழுதை பொதியுடன் சென்று கொண்டிருந்தது. அது தாகத்தால் தவிப்பதை ஏகநாதர் புரிந்து கொண்டார். தன்னைப் போலவே அதுவும் ஒரு உயிர்தானே என்ற எண்ணம் எழுந்தது.

imagesமறுயோசனை இல்லாமல் தீர்த்தக்காவடியை கழுதையின் பக்கத்தில் இறக்கி வைத்து இராமநாதரின் திருநாமத்தை சொல்லியபடி கழுதையின் வாயில் கங்காதீர்த்தத்தை விட்டார்.   உயிரே திரும்பியது போல கனைத்த கழுதை ஏக நாதருக்கு நன்றி தெரிவிப்பதுபோல் கழுத்தை உயர்த்தி பார்த்தது. சீடர்கள் அவரது செயல் கண்டு திகைத்தனர்.

ST_20141208165540116461அதைப் புரிந்துகொண்ட ஏகநாதர் சீடர்களிடம்  “ ராமநாதருக்கு சேர வேண்டிய கங்கா தீர்த்தத்தை கழுதைக்குக் கொடுத்தது பற்றி தானே யோசிக்கிறீர்கள். கடவுள் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். கங்காதரரான சிவனே இங்கு கழுதை வடிவில் வந்து தாகத்தை தணித்துக்கொண்டதாகவே கருதுகிறேன். இது தான் கடவுள் விரும்பும் நிஜமான கங்காபிஷேகம்” என்றார்.  எல்லா உயிர்கள் மீது இரக்கம் வேண்டும் என்பது இவரது செயல் மூலம் உணர்த்தப்படுகிறது.

Advertisements

2 thoughts on “உயிர் தந்த கங்காபிஷேகம்

  1. வணக்கம்
    அம்மா

    உண்மைதான் நல்ல கதைமூலம் உயிர்கள் இடத்து இரக்கம் காட்ட வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள் ஆனால் இந்த காலத்தில் எங்கே இருக்கிறது ஒரு சிலரிடம் மட்டுமே…

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s