ஆஹா தகவல்

RIMORA - Copy

‘ரிமோரா’ என்று ஒரு வகை மீன் ஜப்பான் கடற்கரையோரம் இருக்கிறது. இது மிகவும் வினோதமானது. இம்மீனின் நாக்கு வாயில் இல்லை. தலைக்குமேல் வெளியில் தெரியும்படி இருக்கும். புழு பூச்சிகளை காந்தம் போல் இழுத்துப்பிடித்து வாயில் போட்டுக்கொள்கிறது.

Rocky_Marcianoஉலகிலேயே தான் கலந்துகொண்ட குத்துச் சண்டைப் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்ற வீரர்  ‘ ராக்கி மார்சியோனோ’ தான். இவர் 1947 க்கும் 1956க்கும் இடையில் கலந்துகொண்ட 49 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளார்.

download (1)பாற்கடலில் தோன்றிய ஐந்து மரங்களில் ஒன்றான பாரிஜாத மரத்தினை பூமிக்குக் கொண்டு வந்தான். இதுவே பவழமல்லிகை எனப்படுகிறது. சிவப்புக் காம்புடன் மிக மெல்லிய ஐந்து வெண்ணிற இதழ்களைக் கொண்ட இப்பூ சிவனுக்குரிய எட்டு பூக்களில் ஒன்றாகும்.

sushrutaஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘ சுஷ்ருதா’ என்பவர் தான் உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர். ‘ சுஷ்ருதா சம்ஹிதா ‘ என்ற நூலில் 120 வகையான அறுவை சிகிச்சை உபகரணங்களைப் பற்றியும் அறுவை சிகிச்சைக்கான 300 வழிமுறைகளையும்  8 வகையான அறுவை சிகிச்சைகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தையும் உபகரணங்களின் பராமரிப்பு பற்றியும் இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். இவரே அறுவை சிகிச்சை முறைகளின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.download (5) - Copy

downloadஎந்த நாட்டு தேசியக்கொடியும் இரு பக்கங்களிலும் ஒரே மாதிரி இருக்கவேண்டும்  என்பது விதி. நம் நாட்டுக் கொடியில் மூவர்ணப் பின்னணியில் எளிய மக்களின் சின்னமான ராட்டை அமைக்கப்பட்டது. ஆனால் பின்புறம் பார்த்தபோது வலஇடமாக மாறித் தெரிந்தது. அதனால் சக்கரத்தை மட்டும் வைக்க முடிவு செய்தார்கள். எந்தச் சக்கரம் என்று விவாதித்து பின் அசோகரின் தர்மச் சக்கரம் வைக்க முடிவு செய்யப்பட்டது.

download (4) - Copyஒலிம்பிக் ஜோதியை தீப்பந்தத்தால் ஏற்றுவதில்லை. சூரிய ஒளியை ஒரு பெரிய லென்ஸ் வழியாகச் செலுத்தி உருவாகும் தீப்பொறியால் ஏற்றுவதே வழக்கம்.

download - Copyஎலக்டாரானிக் வோட்டிங் மெஷினை வடிவமைத்தவரின் பெயர்  ஹனிபா.  1984ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த மெஷினை ஹைதராபாத்தில் உள்ள எலக்டரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவும் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்டரானிக்ஸ் லிமிடெட் கம்பெனியும் தயாரிக்கின்றன.

download (2) - Copyமூங்கிலிலிருந்து எடுக்கும் மரக்கூழ் காகிதம் செய்ய உதவுகிறது. மூங்கில் இலை கால் நடைகளுக்கு நல்ல தீவனம். இளங்குருத்தை நீரில் ஊறவைத்து ஊறுகாய் செய்தும் உண்பதுண்டு. மூங்கில் கணுக்களுக்கிடையே உள்ள நீர் வற்றி மூங்கில் முத்து உருவாகும். இதனை மருந்தாகப் பயன்படுத்துவார்கள்.

download (3) - Copyஉலகின் புகழ்பெற்ற தண்ணீர் நகரம் வெனிஸ். இத்தாலியில் உள்ள இந்த நகரம் 150 கால்வாய்களுக்கு நடுவே அமைந்த 100 தீவுகளைக் கொண்டது 400 பாலங்கள் இந்தத் தீவுகளை இணைத்திருக்கின்றன. எங்கு செல்ல வேண்டுமானாலும் படகுப் போக்குவரத்துத்தான். 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட நீர் நகரமான வெனிஸ் மனத்தை கொள்ளை கொள்ளும் அழகுடன் மிளிர்கிறது.

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s