இதம் தரும் இளம் நுங்கு

images

நல்ல இளம் நுங்கைப் பதம் பார்த்து எடுத்து வாயில் போட்டுக்கொண்டால் ஐஸ்க்ரீமை விட மென்மையாக அப்படியே வழுக்கிக்கொண்டு தொண்டைக்குள் இறங்கும்.

நுங்கிலுள்ள நீர்ச்சத்து உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சியை தருகிறது. வெயில் காரணமாக உடலில் உண்டாகும் எரிச்சல் தோல் சிவத்தல் வேர்க்குரு வேனல் கட்டிகள் போன்றவற்றைக் குணமாக்கும்.

இளம் நுங்கிலுள்ள திரவத்தை பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூசினால் விரைவில் குணமாகும். நல்ல மலம் இளக்கியாகவும் நுங்கு செயலாற்றுகிறது.download (1)

பசியைத் தூண்டக்கூடிய நுங்கு வயிற்றுப்புண்களையும் ஆற்றும்.

களைப்பாக உள்ள நேரத்தில் நுங்கு சாப்பிட்டால் உடனடியாகப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

இளம் நுங்குகளின் மேல் தோலைச் சீவி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். அந்த நுங்கு துண்டுகளின் மேல் சர்க்கரையைத் தூவி நுங்கு நீரைக் கலக்கவேண்டும். பிறாகு அவற்றை ஸ்பூனில் ஒவ்வொன்றாக எடுத்துச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இது உடலுக்கும் நல்லது.

நுங்கில் சர்க்கரை கலந்து சாப்பிடப் பிடிக்காதவர்கள் நுங்கு துண்டுகளுடன் நன்னாரி சர்பத் அல்லது ரோஸ் சர்பத் சேர்த்து சாப்பிடலாம்.

download (2)இளநீரில் இரண்டு நுங்குகளை சிறிதாக நறுக்கி மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஜூஸாக சாப்பிட்டால் சுவையே தனிதான்.

நுங்கை துண்டுகளாக்கி அத்துடன் வெல்லத்தை தட்டிப்போட்டு சாப்பிட உடனடி எனர்ஜி கிடைக்கும்.

நுங்கை வெட்டியவுடன் சாப்பிட்டுவிட வேண்டும் ப்ரிஜ்ஜில் வைத்தால் சத்துக்கள் அழிந்துவிடும்.

நன்றி   ஆர் ஜெயலெட்சுமி   திருநெல்வேலி

Advertisements

2 thoughts on “இதம் தரும் இளம் நுங்கு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s