ஸ்ரீ கங்காஜடேஸ்வரர்

download (1)

புற்றில் அடைப்பட்டிருந்த ஈசனை கோ பால் சுரந்து குறிப்பால் வெளிக்காட்டிய ஸ்தலம் கோகறந்த புத்தூர். இங்கு ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஸ்ரீகங்காஜடேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். வசிஷ்ட முனிவரிடம் பெற்ற சாபத்தை தேவேந்திரன் நீங்கப் பெற்ற ஸ்தலம்  அர்ஜூனன் அம்பாளை வழிபட்டு வெற்றி வரம் வாங்கிய ஸ்தலம் என பல சிறப்புக்களும் இத்தலத்துக்கு உண்டு. திரு ஞானசம்பந்தர்   அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமிது.

இக்கோயில் அன்னிய படையெடுப்பின்போது பலமுறை சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு சான்று இங்குள்ள சிதைக்கப்பட்ட நடராஜர் சிலை. இக்கோயிலின் முகப்பில் கோ பால் சுரந்தபடி புற்றிலிருக்கும் லிங்கத்தைக் காட்டும் காட்சி உள்ளது. நுழைவாயில் கடந்து உள்ளே சென்றால் வினாயகரும் நந்தியம்பெருமானும் இறைவனை நோக்கி காட்சி தருகிறார்கள். மகாமண்டபத்தின் முன்பு தற்காலத்தில் கட்டப்பட்ட துவாரபாலகர்களும் அர்த்த மண்டபத்தின் முன்பு அக்காலத்தில்  செதுக்கப்பட்ட துவார பாலகர்களும் உள்ளனர்.

lingamஅர்த்த மண்டப வலது புறக் கருவறையில் லிங்க வடிவில் ஸ்ரீ கங்காஜடேஸ்வரர் அருள்பாலிக்கிறார். சுற்றுமண்டப வலதுபுறம் நர்த்தன கணபதியும் தட்சிணாமூர்த்தியும் இடது புறம் நின்ற நிலையில் அம்பாள் விஷ்ணு மன்னர் ராஜராஜ சோழன் அவரது மனைவி அவரது மகன் ராஜேந்திர சோழன்

ஞானசம்பந்தர்  மற்றும் சப்தமாதர்களும் காட்சியளிக்கிறார்கள். இவை அனைத்தும் சுற்றுவட்டாரங்களில் புதையுண்டு மீட்கப்பட்ட சிலைகள்

சுற்றுப்பிராகாரத்தின் பின்புறம் சோமாஸ்கந்தரும்  காசி விஸ்வநாதரும் அதற்கு நேர் எதிர்புறம் மகாவிஷ்ணுவும் உள்ளனர்  அதையடுத்து பசு லிங்கத்துக்கு பால் சொரிந்து கொண்டிருக்க அர்ஜூனன் தேவேந்திரன் பகீரத முனிவர் வசிஷ்டர் அம்பாள் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களூம் வணங்கும் அற்புதக் காட்சியை வடிவமைத்துள்ளனர்.

பிராகாரத்தின் வடக்கு பகுதியில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது.  அதற்கு எதிர்புறம் பிரம்மா  சண்டிகேஸ்வரர் பைரவர் மற்றும் துர்கை உள்ளனர். கருவறை சுற்றுச் சுவற்றில் கங்காதர பைரவர் கங்கையை ஆட்கொள்ளும் அற்புதக்காட்சியும் இக்கோயிலைக் கட்ட காரணமாய் இருந்த கண்டாதித்த சோழரின் மனைவி செம்பியன்மாதேவி சிவலிங்கத்தை வழிபடும் காட்சியும் அமைந்துள்ளன.

சன்னதியின் வலதுபுறத்தில் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீ மங்களாம்பிகை சன்னதி உள்ளது.  கோயிலின் எதிர்ப்புறம் உள்ள தீர்த்த குளத்தில் நீராடினால் சாப விமோசனம் திருமண பாக்கியம்  புத்திர தோஷ நிவர்த்தி  கிடைக்கும். அத்தோடு நவக்கிரஹ தோஷம் நீங்கி சகல ஜஸ்வர்யங்கள் பெறவும் கங்கையில் நீராடிய பலனையும் ஸ்ரீ கங்காஜடேஸ்வரர் அருள்கிறார்.

நன்றி   எம் எஸ் மதுக்குமார்

செல்லும் வழி  ஜெயங்கொண்டத்திலிருந்து தா பழுர் மார்க்கமாகவும்   அரியலூரிலிருந்து விக்கிரமங்கலம் மார்க்கமாகவும் கும்பகோணத்திலிருந்து நீலத்த நல்லூர்  தா. பழுர் மார்க்கமாகவும் கோவிந்தபுத்தூர் சென்றடையலாம்.

Advertisements

One thought on “ஸ்ரீ கங்காஜடேஸ்வரர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s