யமுனா ஜெயந்தி

yamuna-river

கங்கை யமுனை கோதாவரி சரஸ்வதி நர்மதை சிந்து காவேரி ஆகிய இந்த ஏழு நதிகளைப் புண்ணிய நதிகள் என விவரிக்கின்றன புராணங்கள். அவற்றில் யமுனைக்கு தனிச்சிறப்பு உண்டு. அதனால்தான் யமுனா ஜெயந்தி என்று இந்த நதியின் பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்தியாவின் மிக நீளமான நதி என்று சொல்லப்படும் யமுனை இமய மலையில் யமுனோத்திரி என்னுமிடத்தில் உற்பத்தியாகி இந்தியாவின் வட மானிலங்களை தனது வண்டல் மணலினால் செழிக்க வைத்து விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த யமுனை தோன்றிய சித்திரை மாதத்தின் வளர்பிறை ஆறாம் நாளைத்தான் யமுனா ஜெயந்தி என்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

Yamunaபுராண ரீதியாக யமுனை சூரிய பகவானின் பெண் என்றும் யமனின் சகோதரி என்றும் சொல்லப்படுகிறாள். ஆதலால் யமுனைக்கு யமி என்ற பெயரும் உள்ளது. பக்தர்கள் யமுனையில் நீராடினால் பாவங்கள் தொலைந்து மக்களுக்கு யமபயம் இருக்காது என நம்புகிறார்கள்.

இங்கே இன்னொரு நுட்பமும் கவனிக்கத்தக்கது. உலகனைத்துக்கும் ஒளி தருபவனாக விளைவுக்குக் காரணமாக பலன் கருதாது பணிபுரிபவனாக இயங்குகிறான் பகவான். அவன் மைந்தன் எமனோ காலதேவனாக தர்மத்தை பிறழாதவனாக தர்மத்தைக் காப்பவனாக எமதர்மன் என்று விளங்குகிறான். இவன் சகோதரி யமியான யமுனையோ உயிர்க்குலமும் பயிர்க்குலமும் தழைக்கவே இமயத்தில் இருந்து கடல்வரை பயணீக்கிறாள். பெற்றோர்கள் சரியாக இருந்தால் பிள்ளைகள் சரியாக நடப்பார்கள் என்கிற வாழ்வியல் நுட்பம் இங்கே உணர்த்தப்படும் விஷயம்.

images (1)கிருஷ்ணாவதாரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவருடைய  தாய்மாமன் கம்சனிடமிருந்து காப்பாற்ற கிருஷ்ணரின் தந்தை வசுதேவர் பிறந்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து தூக்கிக்கொண்டு அருகிலுள்ள மதுராவுக்கு செல்கிறார்.  அப்போது மிகவும் உக்கிரமாக பாய்ந்து கொண்டிருந்த யமுனை நதி இரண்டாகப் பிளந்து குழந்தையை சுமந்து செல்லும் வசுதேவருக்கு வழி ஏற்படுத்திக்  கொடுத்தது  அதுமட்டுமல்ல் பின்னாளில் பிருந்தாவனவாசியான கிருஷ்ணரின் லீலைகள் அனைத்தையும் கண்டு ஆனந்தித்தவல் இந்த யமுனைதான். கண்ணனின் குழலினையும் ராஸலீலையையும் கேட்டும் கண்டும் இன்புற்ற சிறப்பு இவளுக்கே உண்டு

imagesஅதனால் மதுராவிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் இந்த யமுனையின் பிறந்த நாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் மார்ச் 25ம் தேதி யமுனா ஜெயந்தி வருகிறது. யமுனைக்கு சென்று நீராட முடியவில்லை என்றாலும் யமுனையை நினைத்துக்கொண்டு வீட்டிலேயே நீராடுவோம். கண்ணனின் திருமேனி ஸ்பரிசத்தால் சற்றே கருமை பாய்ந்த நீரோட்டமான யமுனா நம்மையும் நலம் பெறச் செய்வாள்.

Advertisements

One thought on “யமுனா ஜெயந்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s