சுவேதாரண்யேஸ்வரர் கோயில்

T_500_530

பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்கு துன்பம் விளைவித்தான். இதனால் தேவர்கள் மாறு வேடத்தில் வந்து திருவெண்காட்டில் தங்கினர். அந்த அசுரன் விடாக்கண்டன். அங்கும் வந்துவிட்டான். அவன் அங்குள்ள சிவனி  நோக்கித் தவம் செய்து தேவர்களை அழிக்கும் வல்லமையை வேண்டினான்.  யாராக இருந்தாலும் அவர்கள் ஒருமித்த மனதுடன் வணங்கினால் வரமருளும் சிவன் அந்த அசுரனுக்கு சூலாயுதம் ஒன்றைக் கொடுத்தார். அவனிடம் “ மகனே  தேவர்களுக்கு   இடையூறு செய்ய இதைத் தரவில்லை. அவர்களும் எனது பக்தர்களே. எதிரிகளால் உனக்கு இடையூறு வருமானால் அவர்களிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள்ள மட்டும் இதைப் பயன்படுத்த வேண்டும் “ என்று நிபந்தனை விதித்தார்.

download (1)ஆனால் அசுரனின் புத்தி மாறுமா? அவன் அந்த சூலத்தால் சிவனின் காவலரான நந்திதேவரையே தாக்கி காயப்படுத்தினான். நந்தி தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து அகோரமூர்த்தி தோன்றினார்.  இந்த அகோர உருவைக் கண்ட மாத்திரத்திலேயே அசுரன்  சிவனிடம் சரணாகதி அடைந்தான். அவனை அகோர மூர்த்தி தன் காலடியில் வைத்துக்கொண்டார்.  சிவன் 64 வித உருவங்களீல் உள்ளார். அதில் 43 வது உருவம் அகோரமூர்த்தி. இந்த வடிவத்தில் திருவெண்காட்டில் தங்கினார். அகோரமூர்த்திக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. சிவன் லிங்கவடிவில் மூலவராக உள்ளார். இவரை சுவேதாரண்யேஸ்வரர் என்பர். சுவேதம் என்றால் வெள்ளை.  வெள்ளை மனம் கொண்ட பக்தர்களுக்கு காவலாக இருப்பவர் இவர்.G_T2_530

பிரம்ம வித்யாம்பாள்

மாதங்க முனிவரின் மகளாகத் தோன்றிய பார்வதி தேவி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து அவரைக் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்மவித்யாம்பிகை ஆனாள்.  சக்திபீடங்களில் ஒன்று இந்தக் கோயில். இங்குள்ள சுவேத வன காளி கலைஞர்கள் வேண்டுவதை அருளுவாள். இது தவிர துர்காதேவி அருள்புரிகிறாள்.

பிள்ளையிடுக்கி அம்மன்18b8d3ae-07e7-477c-9ac9-5a61bcf766bd_S_secvpf

திரு ஞான சம்பந்தர் இத்தலத்தில் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும் மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து அம்மா என்றழைத்தார்.  இங்குள்ள பெரிய நாயகி அம்பாள் இவரைத் தன் இடுப்பில் தூக்கிக்கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரிய நாயகியின் சிலை அம்மன் கோயிலில் பிரகாரத்தில் உள்ளது.

புதன் பகவான்.G_T8_530

வித்யாகாரகன் எனப்படுபவர் புதன்  பகவானுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இத்தலத்தில் திருவெண்காடரை வணங்கிய இவர் பிறப்பால் ஏற்பட்ட மனக்கஷ்டம் நீங்கி நவக்கிரஹங்களில் ஒருவராகும் பேறு பெற்றார். அத்துடன் ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கும் அதிபதி ஆனார் திருவெண்காடு கோயில் தமிழகமெங்கும் புகழ் பெற இவரே காரணமானார். கல்வி  பேச்சு  இசை ஜோதிடம் கணிதம் சிற்பம்  மருத்துவத்தில் திறமை  தர வல்லவர் இவர். புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும் சந்திர புஷ்கரணி தீர்த்தமும் புதன் சன்னதி எதிரில் அமைந்துள்ளது. ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. மேலும் இவர்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படும். இதனால் எப்போதும் படபடப்புடன் இருப்பார்கள். இந்த குறைபாடு உள்ளவர்கள் சந்திர புஷ்கரணி தீர்த்த நீரைத் தலையில் தெளித்து புதனுக்கு 17 தீபம் ஏற்றி  வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசை திரைப்பட கலைஞர்கள் இவரை வழிபட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.large_193511

சீர்காழியில் இருந்து பூம்புகார் வழியில்  15 கிமீ

Advertisements

2 thoughts on “சுவேதாரண்யேஸ்வரர் கோயில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s