ஆஹா தகவல்

download-20இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட நகரம் ஜெருசலம். இஸ்ரேலின் தலை நகரான இது யூதர்களின் புண்ணியதலம். 1967 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின்  முழு ஆதிக்கத்தில் உள்ள நகரம் இது.  ஆரஞ்சு சாத்துக்குடி ஏற்றுமதியில் முன்னணி இடத்தை வகிக்கிறது இந்த நகரம்

things_to_do_in_reykjavik_icelandஐஸ்லாந்தில் ரிக்ஜாவிக் என்னுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு நாள் முழுவதும் வானத்தில் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும். கோடை காலத்தில் 24 மணி நேரமும் சூரிய வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.

download (2)ஏ டி எம்  உருவான கதை சுவாரஸ்யமானது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவியின் பிறந்த நாளுக்குப் பரிசளிப்பதற்காக பணம் எடுக்க வங்கிக்கு சென்று வரிசையில் நின்றார். பணம் எடுப்பதற்கு முன் வங்கி நேரம் முடிந்து விட்டது என்று கவுண்டரை மூடிவிட்டனர். ஜோன் வெறுங்கையோடு செல்ல மனமில்லாமல் கையில் இருந்த சில்லறையைப் போட்டு சாக்லேட் வெண்டிங் இயந்திரத்திலிருந்து சாக்லேட் எடுத்தார். காசைப் போட்டவுடன் உதிர்ந்த சாக்லேட்டைப் பார்த்ததும் அவர் மனதில் ஏ டி எம் உருவாகிவிட்டது. 1969ல் அவர் உருவாக்கிய ஏ டி எம் வடக்கு லண்டனில் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.

download (11)தேர்தலில் வாக்களிப்போரை வோட்டர்ஸ் என்றும் வாக்குச் சீட்டை வோட் என்றும் கூறுகிறோம்.  “ வாய்ஸ் ஆஃப் டாக்ஸ் பேயர்ஸ் எவ்ரிவேர்” என்ற வாக்கியத்தின் சுருக்கமே இது.

எந்தத் திசையில் தலைவைத்துப்படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்download (10)

கிழக்கு திசையில் தலை வைத்துப் படுப்பது மிகவும் நல்லது. தெற்குத்திசையில் தலைவைத்துப் படுத்தால் ஆயுள் நீடிக்கும். மேற்குத்திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு அதிர்ச்சி உண்டாகும். வடக்குத் திசையில் ஒரு போதும் தலைவைத்து தூங்கக்கூடாது.

download (3)இந்தியாவைச் சேர்ந்த ராஜ்மித்ரு என்ற பெண்  ‘கிளைடர்’ விமான விளையாட்டில் புகழ் பெற்றவர். இவர் தொடர்ந்து ஐந்தரை மணி நேரம் கிளைடர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார். கடந்த 27 ஆண்டுகளில் எந்த ஒரு பெண்மணியும் இவரை முறியடிக்கவில்லை.

wilhelmus10உலகிலேயே பழமையான தேசீய கீதம் டச்சு நாட்டினுடையது  என்ற போதிலும் ஜப்பானின் தேசீய கீதம் டச்சு தேசீய கீதத்தைவிட பழமையானது முதல் பத்தாயிரம் ஆண்டில் எழுதப்பட்ட ஜப்பான் தேசீய கீதம் 1880 ல் தான் இசை வடிவம் பெற்றது.

Sumerian-Tabletசுமேரியர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தனர். அவர்கள் பிரசவிக்க இருக்கும் பெண்ணை மந்திரத்தால் வசப்படுத்துவர். வசியமான பெண் வலியை அறிய மாட்டாள். பிறகு எளிதாக பிரசவம் பார்த்துவிடுவார்கள்.  பண்டைக்கால மக்களுல் இரண சிகிச்சை செய்வதற்கு செம்புக்கத்திகளை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் சுமேரியர்களே.

images (1)இந்திய தேசீயக்கொடியைத் தயாரிக்கும் தொழிற்சாலை உத்திரப்பிரதேசத்தில் இருக்கிறது. இந்திய தேசியக்கொடி ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது.

downloadஸ்ரீ ரங்கம் ரங்க நாதர் சன்னிதியை காலையில் திறக்கும்போது சன்னதி முன் ஒரு பசுவும் ஒரு யானையும் எதிரெதிரே நிறுத்தப்படும். சன்னதியில் இருக்கும் ஐந்து பாத்திரங்களில் கொள்ளிடம் தீர்த்தம் நிரப்பப்படும். வீணை இசைத்தபடி திருப்பள்ளியெழுச்சி பாடி ரங்க நாதரை துயில் எழுப்புவர். உடனே திரைச்சீலை அகற்றப்படும். பெருமாள் தன் முன் நிற்கும் லட்சுமியின் அம்சமான பசு யானையைப் பார்த்து அன்றைய நாளைத் தொடங்குவதாக ஐதீகம்.

Advertisements

4 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s