கார்த்திகை ஆழ்வார்கள்

download (1)

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் சோழ நாட்டில் திருவாலி திரு நகரி அருகிலுள்ள திருக்குறையலூரில் அவதரித்தவர் திருமங்கையாழ்வார்.  திருமாலின் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாகப் பிறந்தவர் அவர். கரிய நிறம் கொண்டவராக இருந்ததால் நீலன் என பெற்றோர் பெயரிட்டனர்.  போரிடுவதில் எதிரிக்கு எமனாக இருந்ததால் பரகாலன் என போற்றப்பட்டார். திருமங்கை நாட்டிற்கு மன்னராக இருந்ததால் திருமங்கை மன்னன் என்ற பெயர் பெற்றார்.

downloadதிருவெள்ளக்குளத்தில் பிறந்த குமுதவல்லியை மணந்தார். திரு நறையூர் நம்பியிடம் தீட்சை பெற்றார். மனைவியின் விருப்பத்திற்காக ஓராண்டு காலம் தினமும் 1008 அடியார்களுக்கு உணவிட்டார். தன் செல்வம் முழுவதையும் இழந்த பின் வழிப்பறியில் ஈடுபட்டு தொண்டு செய்தார். திருமாலே நேரில் வந்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்து அருள் புரிந்தார். ஆசுகவி  மதுரகவி சித்ரகவி விஸ்தாரகவி என்னும் நான்கு கவியும் பாடுவதில் வல்லவர் என்பதால் “ நாலுகவிப்பெருமாள்” எனப்பட்டார். சம்பந்தருடன் வாதம் செய்து அவரிடம் வேலை பரிசாகப் பெற்றதால் கொற்றவேல் பரகாலன் என்று பெயர் பெற்றார். ஸ்ரீரங்கன் கோயிலில் பலத் திருப்பணிகளை செய்தார்.

108ல் 87 திவ்ய தேசங்கள் பற்றி பாசுரம் பாடியுள்ளார். இவர் ஆராதனை செய்த நரசிம்மர் திருவாலி திரு நகரில் இப்போதும் உள்ளார். ஆண்டுதோறும் நம்மாழ்வார் விக்ரஹத்தை ஆழ்வார் திரு நகரியில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு கொண்டுவந்து மார்கழி அத்யயன உற்சவம் நடத்தினார். திருக்குறுங்குடியில் இறுதிக்காலத்தைக் கழித்து திரு நாட்டுக்கு எழுந்தருளினார்.

Advertisements

4 thoughts on “கார்த்திகை ஆழ்வார்கள்

 1. வணக்கம்
  அம்மா
  கார்த்திகை ஆழ்வார் பற்றி சொல்லிய விதம் சிறப்பு நான் அறிந்ததில்லை அறிந்தேன் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s