ஆஹா தகவல்

download

சாப்பிட்டதும் உடனடியாக சக்தியைக் கொடுக்கும் விதத்தில் தயார் நிலையில் குளுகோஸ் நிறைந்துள்ள பழம் மங்குஸ்தான் பழம்தான்.download (1)

தேன் கூடு மெல்லியதாக இருந்தாலும் அதன் எடையைப் போல 25 மடங்கு எடையைத் தாங்கும் தேனீக்கள் நிமிடத்துக்கு 11400 முறை சிறகடிக்கின்றன. இதனால் ஏற்படும் சப்தம்தான் ரீங்கார ஒலியாகக் கேட்கிறது.E_1418281138

சிலி நாட்டிலுள்ள மலைகள் தொடர்ச்சியான பனி மழை மற்றும் பேய்க்காற்றால் அப்படியே கரைந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எஞ்சி நிற்பவை தான் டோரஸ்  அதாவது கோபுரங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதுவே பின்னர் டோரஸ்டெல் பெய்ன் தேசியப் பூங்காவாக உருப்பெற்றது. இதிலுள்ள மூன்று சிகரங்களின் உயரம் 8530 அடியெனக் கணக்கிடப்பட்டுள்ளது.alangunai_2154931f

தஞ்சை பெரிய கோயிலின் உள் பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் உள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம் தஞ்சை மற்றும் திருச்சி பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரிய வருகிறது.mus-swadesamitran-img1

தமிழ் நாட்டிலிருந்து முதல் முதலில் வெளியான செய்தித்தாளின் பெயர் ‘ மெட்ராஸ் கூரியர் ‘ ஆங்கிலேய அதிகாரியான சர் ரிச்சர்டு ஜான்சன் என்பவரால் 1785 ம் ஆண்டு அக்டோபர் 12ம் நாள் வெளியிடப்பட்டது. இதன் பிரதிகளை இப்போதும் லண்டன் நகர அருங்காட்சியகத்தில் காணலாம்.220px-Lohia-full

விடுதலைப் போராட்ட வீரர்களில் டாக்டர் ராம் மனோகர் லோகியா மகாத்மா காந்தி உட்பட அன்றைய இந்தியத் தலைவர்கள் பலரும் லண்டனுக்குச் சென்று பட்டம் பெற்றவர்களே. ஆனால் லோகியா ஆங்கிலேயர் தரும் கல்வியும் வேண்டாம்  என்று முடிவு செய்து ஜெர்மனி சென்று படித்தார். ஹிட்லரின் அனீதிகளை எதிர்த்து நிற்கவும் அவர் தயங்கவில்லை. பின்னர் தாயகம் திரும்பி இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டார். மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட மானிலத்தை தமிழ் நாடு என்று பெயர் மாற்றவும் முதன்முதலில் குரல் கொடுத்தவரும் அவரே.download (2)

சொர சொரப்பான தாளில் தேய்த்தால் எரிகிற தீக்குச்சியை கண்டுபிடித்தவர் ஜான் வாக்கர் என்ற ஆங்கிலேயர். இதனை 1827ம் ஆண்டில் கண்டு பிடித்தார். ஃபாஸ்பரஸ் தீக்குச்சியை கண்டு பிடித்தவர் சார்லஸ். பிரெஞ்சுக்காரரான இவர் 1830 ம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்தார்.

 

Advertisements

4 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s