ஆஹா தகவல்

NagarjunaSagarDam

நீலகிரி மலையில் பாயும் குந்தா நதியில் கட்டப்பட்டுள்ள நீர்மின் நிலையம்தான் தமிழ் நாட்டிலேயே மிகப்பெரியது. கனடா நாட்டின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டது இது.download (7)

இந்தியாவின் முதல் கைதி  தேசத்தந்தை மகாத்மா காந்திதான். 1922 ம் ஆண்டு  மார்ச் 10ம் தேதி சபர்மதி ஆஸ்ரமம் அருகே அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வுதான் நமது நாட்டில் முதன் முதலில் அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.Government_Museum_Banglore_305

பெண்களின் பெருமைகளை விளக்குவதற்காகவே பெங்களூரில் சரஸ்வதி என்ற பெயரில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது.  இது பெண்களாலேயே நடத்தப்படுகிறது.  பழங்காலத்தில் இருந்து பெண்கள் பயன்படுத்திய பொருட்கள் நகைகள் பொம்மைகள் தையல் இயந்திரங்கள் பெண் எழுத்தாளர்கள்  எழுதிய நூல்கள் எனப் பலவிதமான பொருட்களை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர்.download (3)

நாம் பயன்படுத்தும் லிப்ட் 1852 ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. எலீஷா கிரேல்ஸ் ஓடிஸ் என்பவர் இதை உருவாக்கினார். முதல் லிப்ட் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டல் பேலஸ் கட்டடத்தில் பொருத்தப்பட்டது.download

நாக்கின் மையப் பகுதியில் சுவை அரும்புகள் கிடையாது. அடி  நாக்கில் கசப்பும் நுனி நாக்கில் இனிப்பும் பக்கவாட்டில் உப்பும்  புளிப்பும் உணரக்கூடிய சுவை அரும்புகள் உள்ளன. இவை நூற்றுக்கணக்கான நுண்ணிய papillae என்னும் சுவை மொட்டுக்களாக நாக்கின் மேற்பரப்பில் அமைந்துள்ளன.download (1)

ஈக்களுக்கும் பட்டுப்பூச்சிக்கும் சுவை அரும்புகள் கால்களில் உள்ளன.hqdefault

பிரேஸில் நாட்டைச் சேர்ந்த 19 வயது மேரி பியூனோ 1959 ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பந்தயத்தில் வென்றார். மேரிக்கு அந்த நாட்டில் 8 அடி உயரத்தில் சிலை ஒன்றை நிறுவினர். அந்தப் பெண்ணின் படம் போட்ட தபால் தலையையும் வெளியிட்டது அந்நாடு. உலகில் எந்த நாடும் ஒரு பெண் வீராங்கனைக்கு இப்படி மரியாதை செய்ததில்லை.download (6)

உலகின் முதல் அணுகுண்டை விஞ்ஞானிகள் உருவாக்கிக்கொண்டிருந்தார்கல். அதன் உருவாக்கப் பணிகளைப் பார்த்துவிட்டு வந்த டாக்டர் ராபர்ட் ஆப்பன் ஹீமர் அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி முன்பு அணுகுண்டு பற்றிய விவரங்கள் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் எழுந்து “ இவ்வளவு ஆபத்தான் அணுகுண்டிலிருந்து தப்பிக்க ஏதேனும் பாதுகாப்பான கருவி இருக்கிறதா?” என்றார்.  ஆமாம் இருக்கிறது  அதுதான் சமாதானம் என்று புன்னகைத்தார் ராபர்ட் ஆப்பன் ஹீமர்.839236-Poda-Island-0

அண்டாடர்டிக்காவில் காணப்படும் ஒரு தீவின் பெயர் போபேடா  கடந்த 15 ஆண்டுகலில் அந்த தீவு இருந்த இடத்திலிருந்து 24 கிமீ இடம் பெயர்ந்து விட்டதாம். இதையே உலகின் வேகமாக நகரும் தீவு என்று அழைக்கிறார்களாம்.download (4)

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் வடிவமைப்பாளர் அப்புசாமி என்பவர் கிரிக்கெட் வீரர் சச்சின் உருவத்தை கைத்தறி திரைச்சீலையில் பொறித்து நெய்துள்ளார்.download (5)

குரங்குகளிலேயே மிக அதிகமாக வாழக்கூடியது உராங்குட்டான் தான். இக்குரங்கு 57 வயது வரை வாழ்ந்த வரலாறும் உண்டு. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் பூங்காவில் சார்லி என்ற 58 வயது உராங்குட்டான் குரங்குதான் தற்போது உலகிலேயே அதிக வயதுடைய குரங்கு.

 

 

Advertisements

4 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s