தெய்வத்தாய்

download (4)

பிங்கல நாட்டின் மன்னன் ரகுநாதன்.   அவனது மனைவி கருவுற்றாள்  நாடெங்கும் விழாக்கோலம்  தங்கள் இளவரசன் வரவுக்காக மக்கள் காத்திருந்தனர். பிரசவ நாளும் வந்தது.  அரண்மனை வைத்தியர்கள் ஆலோசனைகள் வழங்க தாதிகள் அரசிக்கு பிரசவம் பார்த்துக்கொண்டிருந்தனர். மிகக் கடுமையான வலி வந்தும் குழந்தை பிறக்கிற வழியைக் காணோம்.  ரகுநாதன் வேண்டாத தெய்வமில்லை.  ஒரு வழியாய் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அத்தோடு ஓவென தாதியர்கள் அழும் குரலும் கேட்டு அதிர்ந்தான்.images

குழந்தையின் அழுகுரல் கேட்டு மகிழ்ந்திருந்த ரகுநாதன் தொடர்ந்து வந்த தாதியர்கள் அழுகுரல் கேட்டு அதிர்ந்தான்.  ஆம்……………………. குழந்தையைப் பெற்றுக் கொடுத்த சியாமளா ஜன்னி கண்டு இறந்து விட்டாள்   “ பிரசவம் ஒரு பெண்ணுக்கு மறு பிறவி என்பார்கள்  என் மனைவிக்கு அந்தப் பிறவி கிடைக்காமல் போயிற்றே” என ரகு நாதன் கலங்கி அழுதான். குழந்தையை கவனிக்க யார் இருக்கிறார்கள் என்ற கவலையும் சேர சோர்ந்து போனான்.

தாதிகள் குழந்தையைக் கவனித்துக்கொண்டார்கள்  அவர்களில் தன் நம்பிக்கைக்குரிய பவானி என்பவளைத் தேர்ந்தெடுத்த ரகு நாதன்  பவானி இவனை இனி உன் குழந்தைபோல் கவனித்து வா என்றான். பவானியும் மகிழ்வுடன் சம்மதித்தாள்.ST_121751000000

பவானியின் கணவன் ஏற்கெனவே இறந்துவிட்டான். அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன். இரண்டு குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்தாள். மனைவியின் இறப்பால் சோகத்தில் ஆழ்ந்திருந்த மன்னனால் நாட்டின் நிர்வாகத்தில் சீராக கவனம் செலுத்த முடியவில்லை. இதைப் பயன்படுத்தி அமைச்சர்களும் பிற அதிகாரிகளும் மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். ஆனால் மக்களோ மன்னனைத் தான் தூற்றினர்.

ரகுநாதனுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தி அவனை நாட்டைவிட்டு துரத்திவிட வேண்டும்  தாதியிடம் வளரும் இளவரசனைக் கொன்றுவிட வேண்டும். தங்களில் ஒருவர் ராஜாவாகவும் மற்றவர்கள் ராஜபிரதிநிதிகளாகவும் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என திட்டமிட்டனர்.

திட்டத்தின் முதல் கட்டமாக இளவரசனைக் கொல்ல சதி செய்தனர். இதை  பவானி தெரிந்துகொண்டு விட்டாள். இளவரசனைக் கொல்ல வரும் நாளில் அவனை வெளீயே அழைத்துச் சென்று ஒரு வீட்டில் மறைவாக வைத்துவிட்டாள். தன் மகனுக்கு இளவரசன் போல் அலங்காரம் செய்து அவன் படுக்கும் கட்டிலில் தூங்க வைத்தாள். சதிகார அமைச்சர்கள் இருளில் பதுங்கி வந்தனர். தூங்கிக் கொண்டிருந்த பவானி மகனை இளவரசன் எனக்கருதி கொன்றனர்.download

விஷயம் மன்னனுக்குத் தெரிந்தது. அவன் பவானியின் தியாகத்தைப் பாராட்டினான். அமைச்சர்கள் செய்த சதியை மக்களுக்கு தெரியப்படுத்தினான். மக்களுக்கு உண்மை தெரியவரவே அவர்கள் அமைச்சர்களை கட்டி இழுத்து வந்தனர். அந்த ராஜ துரோகிகளை பொது இடத்தில் தூக்கிலிட்டனர்.

மகனின் பிரிவை தாங்காத பவானி கவலையில் இறந்து போனாள். அந்த தியாகத்தாயை தெய்வமாக மதித்து அவளுக்கு சிலை வைத்தனர். மன்னன் அவளுக்கு கோயில் எழுப்பினான். அவள் பிங்கல நாட்டின் குலதெய்வமாக வணங்கப்பட்டாள்.

 

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

 

Advertisements

4 thoughts on “தெய்வத்தாய்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s