வெந்தயம் சேருங்க நோய்களை வெல்லுங்க

images

மருத்துவ குணம்

வெந்தயம் கீரை வகையைச் சேர்ந்தது. வெந்தயம் மெந்தியம் மேதி  வேந்தை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

கீரை வயிற்றுப்பொருமல் மந்தம் வாத மிகுதி கபம் இருமல் சுவையின்மை போன்றவற்றைக் குணப்படுத்தும்

விதை குழந்தைகளுக்கு ஏற்படும் கணக்காய்ச்சல் சீதபேதி குணமாகும். வெள்ளை நோயைக் குணப்படுத்தும்.

அத்துடன் அதிவேட்கை வேக இருமல் கபம் ஆண்மைக் குறைவு முதலானவற்றை குணப்படுத்தும்.

எப்படிப் பயன்படுத்துவது

வெந்தயத்துடன் பருப்பு மிளகு சீரகம் சேர்த்து குழம்பாக செய்து உண்ண அஜீரணம் வயிற்றுப்பொருமல் குணமடையும்.

வெந்தயத்தை பொரியல் கூட்டு துவையல் செய்து உண்ண பித்தம் நீங்கி உடல் குளிர்ச்சி அடையும்.

வெந்தயம் கறிவேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் வீதம் உட்கொள்ள  நீரிழிவு நோய் மட்டுப்படும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் அதிக ரத்தப்போக்கு உடைய பெண்கள் வெந்தயக் களி  செய்து உண்ண மாதவிடாய் கோளாறு நீங்கும். இது கர்ப்பப்பையை பலப்படுத்தும். வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜன் இருப்பதால் இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற உணவு.download (1)

வெந்தயம் கொள்ளு இரண்டையும் சம அளவு எடுத்து வேக வைத்து தினமும் உண்ண உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை குறையும்.

வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை தேங்காய் சேர்த்து நெய்யில் சமைத்து உண்ண இடுப்பு வலி தீரும்.

வெந்தயக் கீரையை வேக வைத்து தேன் விட்டு கடைந்து உண்ண மார்புவலி, மூலம் ,இருமல் குணமாகும்.

தினமும் ஒரு லிட்டர் நீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி அரை டீஸ்பூன் வெந்தயம் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பெண்களுக்கு மாதாந்திர பூப்பு சுழற்சி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குறைய ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 100 மில்லி மோருடன் கலந்து உட்கொள்ளலாம்.download

வெந்தயக்கீரையுடன் பாதாம் பருப்பு கசகசா கோதுமைப்பால் பால் நெய் சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வனப்பு அதிகரிக்கும்  ஆண்மை பெருகும்.

வெந்தயம் 15 கிராம்  பச்சரிசி 300 கிராம் சேர்த்து சாப்பிட ரத்தம் பெருகும்.

வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து திராட்சையுடன் சேர்த்து உண்ண மலச்சிக்கல் தீரும்.download (1)

வெந்தயத்தை வறுத்துப் பொடித்து கறிவேப்பிலை சேர்த்து மோரில் கலந்து குடிக்க நாள் பட்ட பேதி கழிச்சல் குணமாகு. வெந்தயக்கீரையை அரைத்து தீப்பட்ட புண்ணில் கட்ட புண் ஆறும்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட வெந்தயத்தை நாம் தினமும் வீட்டில் சாம்பார் ரசம் கூட்டு பொரியல் என எல்லாவற்றிலும் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

 

நன்றி  மங்கையர் மலர்.

 

Advertisements

2 thoughts on “வெந்தயம் சேருங்க நோய்களை வெல்லுங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s