கலியுக வரதன்

1289739614_p14

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் தூய நற்ஜோதி நாராயணன் என்பார்கள். அப்படி கற்தூணில் காட்சி கொடுத்து பக்தர்களைக் காப்பவர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள்  ஏறக்குறைய 260 ஆண்டுகளுக்கு முன்பு செதலவாடி கிராமத்திலிருந்து கோபால படையாச்சியார் தனது தாய்மாமன் ஊரான கடுகூரில் குடி பெயர்ந்து அருகிலுள்ள காடுகளைத் திருத்தி வேளாண்மையைப் பெருக்கி வந்த சமயம்.  கோபாலகுடிக்காடு என்று அழைக்கப்பட்ட ஊர்தான் இன்றைய கோப்பிலியங்குடிக்காடு. கோபாலனுக்கு ஆண் வாரிசு பிறக்க அந்தக் குழந்தைக்கு மங்கான் என பெயரிட்டார்.download

தந்தையைப் போலவே வேளாண்மையில் சிறந்த மங்கானும் மாடுகளை நிறைய வளர்த்து வந்தார். அந்த மந்தையில் இருந்த ஒரு வெள்ளைப் பசு ஒரு நாள் தனது கன்றுடன் மாயமாகி விட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலை.  மூன்றாம் நாள் இரவு அழகிய திருமேனியுடைய ஒரு பெரியவர் கனவில் தோன்றி “ ஊரின் மேற்குப் புறத்தில் இரண்டு மைல் தொலைவில்  ஆலமரத்துக்கும் மஹாலிங்க மரத்துக்கும் இடையே ச்ங்கு இலை புதரருகே உன் மாடும் கன்றும் நிற்கும் “ என கூறி மறைந்தார்.G_T8_1132

மங்கான் ஆட்களை அழைத்துக்கொண்டு குறிப்பிட்ட அடையாளத்தை அடைந்தபோது சங்கு புதரின் மீது சாய்ந்து கிடந்த கம்பத்தின் மீது பசு பால் சொரிந்தபடி நின்றது. அவர் அழைத்தவுடன் பசு அவருடன் வீடு திரும்பியது. சரியாக ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே பெரியவர் கனவில் தோன்றி  “ குழந்தாய் மங்கான் பொய் பொருளான பசுவை மட்டும் அழைத்துக்கொண்டு மெய்பொருளான என்னை கைவிட்டாய்  உன் முன்னோர்கள் செதலவாடி கிராமத்தில் என்னை வழிபட்டார்கள்  எமக்குக் கோயில் கட்ட கம்பம் ஏற்றி கானகம் வழியே வந்தபோது வண்டு அச்சு முறிந்ததால் முனை முறிந்த கம்பத்தை விட்டுவிட்டு சென்று விட்டார்கள்.  சாய்ந்த கம்பத்தை நிலை நிறுத்தவும் வணங்கவும் உனக்குத்தான் உரிமை இருக்கிறது. உன் சந்நதிகளையும்  என்னை வணகுவோரையும் காப்பேன். இதை உனக்கு உரைக்கவே  யாம் பசுவை மறைத்தோம் “ எனக்கூறி மறைந்தார்.kallankurichi

கம்பத்தை நிலை நிறுத்தி வழிபடத் தொடங்கினார் மங்கான். மேலும் தனது உடைமைகளைக் கொண்டு ஆலயம் அமைத்தார்.  சுமார் 12 அடி உயர கம்பமாய் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார் வரதராஜப்பெருமாள். தாயார் சன்னதி இல்லை. உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜபெருமாள்.  எதிரே விளங்கும் கோலத்தில் கருடாழ்வார். ஒரே சன்னதிதான் அழகிய சுற்றுப் பிரகாரத்துடன் கூடிய எழிலார்ந்த ஆலயம்.SriVaradarajarKovil

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முடியிறக்குதல்  பிறக்கும் முதல் பசுக்கன்றை விடுதல்  தானியங்களை செலுத்துதல் போன்ற நேர்த்திக்கடன் மூலம் தங்கள் பக்தியை செலுத்தி வருகிறார்கள்.G_T7_1132

பெருமாளுக்கு நித்தியகால பூஜைகளும் மாதாந்திர பூஜைகளும் நடக்கின்றன. ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஸ்ரீராம நவமியன்று கொடியேற்றத்துடன் பத்து நாட்களூக்கு திருவிழா நடக்கிறது.  விழாவின் ஒன்பதாவது நாள் திருத்தேர். பத்தாம் நாள் ஏகாந்த சேவை. இந்த சமயத்தில் கடல் போல் மக்கள் வெள்ளம் அலைமோதும்.  ஸ்தல விருட்சம் மகாலிங்க மரம்.T_500_1132

 

செல்லும் வழி   அரியலூரிலிருந்து  ஐந்து கிமீ  பேருந்து ஆட்டோ வசதி உண்டு.

Advertisements

One thought on “கலியுக வரதன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s