சீதளாஷ்டமி

125

பனிக்காலம் முடிந்து இளவேனில் ஆரம்பிகின்ற சமயத்தில் கொண்டாடப்படுகிற வைபவம் சீதளாஷ்டமி. சீதளா என்றால் குளுமை என்று பொருள். வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படும் வெக்கை நோய்களான காலரா சின்னம்மை பெரியம்மை போன்றவற்றை தன்னுடைய குளீர்ச்சியினால் போக்கிவிடும் தெய்வமாக சீதளாதேவியை கொண்டாடுகிறார்கள்.

இவளுக்கு வாகனமாக கழுதையும் கையில் ஆயுதமாக துடப்பமும் தரப்பட்டிருக்கின்றன. உடலை பாதிக்கும் நோய்க்கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்தி பூரண ஆரோக்கியம் அளிப்பவள் என்பதற்கான குறியீடு துடைப்பம்.

கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. மற்றவர்களின் சுமையை தனதாகக் கருதி அதற்காக யார் மனமுவந்து உதவுகிறார்களோ அவர்களை விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனமே உணர்த்துகிறது.123

ஆந்திரா தமிழ் நாடு கர்னாடகா கேரளா போன்ற தென்னிந்திய மானிலங்களில் கொண்டாடப்படும் மாரியம்மன் வழிபாடே வட மானிலங்களில் சீதளாஷ்டமி என்ர பெயரில் கொண்டாடப்படுகிறது.  மாட்டுப்பொங்கல்

சமயத்தில் நாம் மாடுகளை குளிப்பாட்டி பொட்டிட்டு அலங்கரிப்பது போல் கழுதையை அலங்கரித்து பொட்டிட்டு கொண்டாடுகிறார்கள்.

இப்பண்டிகை வருடா வருடம் சித்திரை மாதத்தில் கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் உபவாசம் இருந்து சீதளாதேவியை வேண்டி நோன்பிருப்பார்கள். இதை பசோடா என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். அன்று பொதுவாக எந்த வீட்டிலும் சமைப்பதில்லை. ஒரு நாள் முன்பாகவே சமைத்து வைத்த உணவையே சாப்பிடுவார்கள்.  ‘ BASI ‘ என்ற வடமொழி சொல்லுக்கு முந்தைய இரவு உணவு என்று பொருள். அதிலிருந்து வந்ததுதான் பசோடா. அதாவது குளிர்ந்த சூடுல்லாத உணவை சாப்பிடுதல் என்று பொருள்படும்.

ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சகஷூ [ CHAKSHU ] என்ற கிராமம் மற்றும் ராஜஸ்தான் குஜராத் உத்திரபிரதேசம் போன்ற மானிலங்களில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை இது. இதை முன்னிட்டு இந்த மானிலங்களில் சந்தைகள் கூடும். சந்தைகளில் எல்லாவிதமான விவசாய உபகரணங்களும் பெண்களுக்கான வளையல் போன்ற ஆபரணங்களும் விற்பனைக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் இந்தக் கொண்டாட்டங்களைப் பார்க்கவும் அரிய பொருட்களை சந்தையில் வாங்கவும் குவிகிறார்கள்.

 

Advertisements

2 thoughts on “சீதளாஷ்டமி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s