சரியான பதில் “ இது “ தான்

download

பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடந்து கொண்டிருந்தது. மாணவர்களிடம் ஆசிரியர் “ ராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் ஒப்பிடுங்கள் “ என்றார்.  ஒரு மாணவன் “ ராமாயணத்தில் நான்கு சகோதர்கள். மஹாபாரத்தில் ஐந்து சகோதர்கள். “ என்றான்.

இன்னொருவன் “ ராமாயணத்தில் ஒவ்வொரு சகோதரருக்கு ஒரு மனைவி ஆனால் பாரதத்திலோ ஐந்து பேருக்கும் ஒரு மனைவி “ என்றான்.Shri-Krishna-And-Arjun-HD-Wallpapers-Mahabharat-

மூன்றாமவன்  “ ராமாயணத்தின் அட்டை கறுப்பு  மஹாபாரதத்தின் அட்டை நீலம் “ என்றான்.  நான்காமவன் “ ஸ்ரீ ராமர் காட்டில் பதினான்கு  வருடங்கள் வசித்தார். பாண்டவர்களின் வனவாசம் பதிமூன்று வருடங்கள்” என்றான்.  ஐந்தாவது மாணவன்  “ ஐயா பெண்ணாசையால் ராவணன் அழிந்தான். மண்ணாசையால் துரியோதனன் அழிந்தான்” என்றான்.

அனைவருடைய பதில்களையும் கேட்ட ஆசிரியர்  “ ஐந்தாம் மாணவன் சொன்ன பதிலே பொருத்தமானது.  ஆசையே அழிவிற்கு காரணம் என்பதையே ராமாயணமும் மஹாபாரதமும் வலியுறுத்துகின்றன. ஆசையற்ற மனதிலே தான் ஆனந்தம் உண்டாகும்” என்றார்.

2 thoughts on “சரியான பதில் “ இது “ தான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s