மஹா சிவராத்திரி   புராணக்கதை

download

முன்பொரு காலத்தில் குருத்ருகன் என்னும் வேடன் வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்தான்.  ஒரு நாள் வேட்டையின் போது அவனுக்கு ஒரு விலங்கும் அகப்படவில்லை. சோர்வுடன் தமது குடுவையில் அருகிலிருந்த ஆற்றிலிருந்து தண்ணீர் கொஞ்சம் எடுத்துக்கொண்டு கரையோரம் இருந்த ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். நீர் அருந்த ஏதாவது விலங்கு வந்தால் வேட்டையாடலாம் என்று காத்திருந்தான்.

அந்தி சாய்ந்தது. அன்று முழுவதும் அவன் உணவு ஏதும் உட்கொள்ளாததால் உறக்கமும் வரவில்லை. முதல் சாமம் வந்தது. அப்போது பெண் மான் ஒன்ரு ஆற்றில் தண்ணீர் அருந்த அங்கு வந்தது. மானைக் கண்ட வேடன் அதை வேட்டையாட ஆயுத்தமானான். அப்போது ஏற்பட்ட சலனத்தில் அவனது குடுவையிலிருந்து தண்ணீர் சிறிது கீழே சிதறியது. அம்மரத்திலிருந்த இலைகளும் கீழே விழுந்தன. வேடனைக் கண்ட  மான் அவனிடம் “ எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் எனது குழந்தைகளை அவற்றின் தகப்பனிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். அதன்பின் என்னை நீங்கள் வேட்டையாடலாம் “ என்றது. வேடனும் ஒப்புக்கொண்டு அதனை விட்டுவிட்டான்.images

இரண்டாம் சாமம் வந்தது. இப்போது வேறொரு பெண் மான் அங்கு நீர் அருந்த வந்தது. மீண்டும் வேடன் ஆயுத்தமாக முன்பு போலவே சலனம் குடுவையிலிருந்து நீர் சிதறல் இலை உதிர்தல்.  அப்பெண் மானும் தமக்குக்கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் தாமும் தமது  குழந்தைகளை அதன் தகப்பனிட்ம் ஒப்படைக்க வேண்டும் என்றது. வேடன் அதனி ஏற்று அதையும் போக விட்டான்.250px-White-tailed_deer

மூன்றாம் சாமம் வந்தது. இப்போது ஆண் மான் ஒன்று தாகம் தீர்க்க வந்தது. இம்முறையும் சலனத்தால் நீர் சிதறல் இலை உதிர்தல். நடந்தது.  அந்த ஆண் மானும் தமது குழந்தைகளையும் இரு மனைவியையும் விட்டு விட்டு வந்துள்ளேன். சிறிது நேரம் பொறுத்துக் கொண்டால் தமது குழந்தைகளை அதன் அன்னையரிடம் ஒப்படைத்துவிட்டு வேடனுக்கு இலக்காவதாகச் சொல்லியது. வேடனும் ஒப்புக்கொண்டான்.

நான்காம் சாமம் வந்தது. அப்போது அவகாசம் கேட்ட மூன்று மான்களும் ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழ விரும்பாமல் தங்களது குட்டிகளை வேறொரு மானிடம் ஒப்படைத்து விட்டு வேடனுக்கு உணவாக அவனிடம் சரண் புகுந்தன. மான்களின் சத்தியத்தை எண்ணி வியந்த வேடன் அவைகளைக் கொல்லாமல் விட்டுவிட்டான். பொழுது புலர்ந்ததால் மரத்திலிருந்து கீழிறங்கினான். அப்போதும் முன்பு போலவே நீர் சிதறல் இலை உதிர்தல் நடந்தது.download (2)

இரவு முழுவதும் வேடன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அம்மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம்  வேடனின் சலனத்தால் குடுவையிலிருந்து நீர் சிதறியது, சிவலிங்கத்திற்கு அபிஷேகமாயிற்று.2f3b

உதிர்ந்த வில்வ இலைகளோ அர்ச்சனையாயிற்று.  அன்றைய இரவோ மஹாசிவராத்திரி என்பதால் வேடன் அவனையறியாமலே நான்கு கால சிவபூஜை செய்த பலனைப் பெற்றான். அதனால் அவன் மனதில் ஊறிய கருணையால் மான்களையும் பிழைத்துப்போக விட்டான்.download (1)

கீழிறங்கி வந்த வேடனுக்கு மான்களின் உருவில் வந்த சிவபெருமான் காட்சி தந்து “ எம்மை இந்த நாளில் நாலு கால பூஜை செய்து வழிபட்டதனால் திருமாலின் ராமாவதார காலத்தில் அவரின் உற்ற தோஷனாகி உயர்வு பெறுவாய் “என்று  அருள்பாலித்தார். அந்த வேடன் தான் ஸ்ரீராமனுடைய வனவாசத்தின்போது உம்மோடு சேர்ந்து ஐவரானோம் என்று கூறி ஸ்ரீ ராமபிரானால் ஆரத்தழுவி ஆசீர்வதிக்கப்பட்ட வேடர் குலத்தலைவன் குகன்.Guha-and-rama-580x708

Advertisements

2 thoughts on “மஹா சிவராத்திரி   புராணக்கதை

 1. வணக்கம்
  அம்மா

  வரலாற்று கதை நன்றாக உள்ளது… குகன் என்ற வேடுவன்தான் என்பதை தங்களின் பதிவு வழி அறிந்தேன்…பகிர்வுக்கு நன்றிஅம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s