நல்வழியில் சென்றால்………….

 

வேப்ப இலைக்குள் வைத்து பழுக்க வைக்கப்பட்டாலும் வாழைப்பழமானது எப்படி தன் இனிப்பு சுவையை இழப்பதில்லையோ அதைப் போலவே நல் இயல்பு கொண்ட நல்லவர்கள்  எக்குடியில் பிறந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் தீய வழியில் செல்லவோ நிலை தடுமாறவோ மாட்டார்கள். அத்தகைய உத்தமர்களுக்கு இறைவன் எப்போதும் துணையிருப்பான் என்பதை விளக்கும் கதை இது.E_1421829031

சில நூற்றாண்டுகளுக்கு முன் மதுரையில் வாழ்ந்து வந்த தேவதாசியான மாணிக்கவல்லிக்கு இரு பெண்கள் இருந்தனர். அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய அவர்கள் சொக்க நாதப் பெருமாளையும் அன்னை மீனாட்சியையும் கணப்பொழுதும் மறக்காமல் வணங்கி வந்ததுடன்  நக்கீரர் எழுதிய கயிலை பாதி கானத்தி பாதி எனும் பாடலை பாராயணம் செய்து சிவ தியானத்திலேயே  வாழ்ந்து வந்தனர். மறந்தும் அப்பெண்கள் தீய வழியை நாடவில்லை.  இதனால் தேவதாசியான மாணிக்கவல்லி நம் பெண்களின் அழகுக்கு அவர்கள் நினைத்தால் இந்த ஊரையே வளைத்துப்போடலாம்  அதை விட்டு சாமி கோயில் குளம் என்று இருக்கின்றனரே என்று நினைத்து அவர்களை தீய வழியில் திருப்ப என்னென்னவோ செய்து பார்த்தாள். முடியவில்லை.

அவர்கள் இருவருக்கும் கயிலைக்கு  இணையான காளத்திக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால் ஒரு நாள் அடியார்கள் போன்ற தோற்றத்தில் இருந்த இரு போலி அடியார்களின் பேச்சை நம்பி அவர்களுடனும் உதவிக்கு இரு பணிப் பெண்களுடனும் காளத்திக்கு புறப்பட்டனர்.kalathi

காளத்தியை நெருங்கும்போது போலி அடியார்கள் கத்தியை எடுத்து நீட்டினர். அப்பெண்கள் இருவரும் பதறி “ காளத்தி நாதா காத்தருள்……………..” என்று கதறினர். அப்போது மலர் பறிக்க வந்த தொண்டர்போல் அங்கே வந்த சிவபெருமான் கள்ள அடியவர்களை அடித்து விரட்டினார்.

அவரிடம் பெண்கள் இருவரும் நடந்ததையில்லாம் விவரிக்க அவர் “ உங்களை திருக்காளத்தியில் சேர்க்கிறேன்……” என்று சொல்லி அதன்படி காளத்தியில் சேர்த்துவிட்டு மறைந்தார்.download

பெண்களுக்கு மெய் சிலிர்த்தது. கயிலை பாதி  காளத்தி பாடி என்ற அந்தாதியை பாடியபடியே காளத்தி நாதர் சன்னதியில் வணங்கி நின்றனர்.  அப்போது சிவலிங்கத்தில் இருந்து சிவப்பும் பச்சையும் கலந்த ஜோதி ஒன்று வெளீப்பட்டது. அப்பெண்கள் இருவரும் கைகளை கூப்பியபடியே ஜோதியில் கலந்தனர்.

 

இதைக் கண்ட பணிப்பெண்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அப்போது “ பணிப்பெண்களே  இக்கன்னியர் இருவரும் முக்தி அடைந்தனர். நீங்கள் அவர்கள் பெயரால் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். “ என அசரீரி கேட்டது. அதன்படியே செய்து பணிப்பெண்களும் முக்தி பெற்றனர். நல்வழியில் செல்பவர்க்கு எவராலும் எந்த தீங்கும் விளைவிக்க முடியாது.

 

Advertisements

2 thoughts on “நல்வழியில் சென்றால்………….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s