ஆஹா தகவல்

download (3)உலகிலேயே சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டே இரண்டுதான்   ஒன்று பிரெஞ்சு  இன்னொன்று  நமது தமிழ் மொழி.images (1)

கிரிக்கெட் மட்டையை வடிவமைத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான்பால் என்னும் செருப்புத் தைக்கும் தொழிலாளி.download (4)

வாசனை திரவியங்களில் மிகமிக அதிக விலை உடையது குங்குமப்பூ. இதில் காம்பு மட்டுமே பயன்படும். ஒரு கிலோ எடையுள்ள குங்குமப்பூ காம்புகளைச் சேகரிக்க ஒன்றரை லட்சம் குங்குமப்பூ தேவைப்படுமாம்.symbio1.0

ஆக்ஸ்பெக்கர் என்று ஒரு குட்டிப் பறவை இது மரங்கொத்திப் பறவையைப் போலவே இருக்கும். ஒட்டகச்சிவிங்கியின் முதுகுதான் இந்தப் பறவை வாழும் இடம். ஒட்டகச்சிவிங்கிக்கு ஆபத்து வருவது தெரிந்தால் இந்தச் சின்னபறவை சப்தம் போட்டு கத்தும். உடனே ஒட்டகச்சிவிங்கி தப்பித்து ஓடிவிடும். இப்படி இந்தச் சிறு பறவையும் ஒட்டகச்சிவிங்கியும் ஒற்றுமையாய் வாழ்கின்றன.Nagor1

தீவிர ராம பக்தரான தஞ்சை மன்னன் பிரதாப்சிம்மன் இஸ்லாமியர்களுக்காக கட்டிக் கொடுத்ததுதான் நாகூர் தர்காuntifrtled

சுறா வகைகளில் அதி பயங்கரமானது வெள்ளை சுறா. இவை சில சமயம் 21 அடி நீளம் வரை வளரும். இவ்வகை சுறாக்கள் மனிதர்களைத் தாக்கும் என்பதால் இதனிடம் மீனவர்கள் எச்சரிக்கையாகவே இருப்பர்.download (1)

அக்பர் ஒரு சமயம் பீர்பாலிடம் பூக்களில் சிறந்த பூ எது? என்று கேட்டார். பீர்பால் அறிவுக்கூர்மை நிறைந்த மந்திரியாயிற்றே சட்டென்ரு மக்களின் மானம் காக்கக்கூடிய ஆடை நெய்யப் பயன்படும் பருத்திப்பூவே சிறந்த பூ என்றார்.par1

பாராளுமன்றத்துக்கான ஆங்கிலச் சொல்லான பார்லிமென்ட் எப்படி வந்தது தெரியுமா? பார்லிம் எனும் லத்தீன் சொல்லுக்கு கூடிப்பேசும் இடம் என்று பொருள். அமைச்சர்கள் பலரும் கூடிப்பேசும் இடம் என்பதால் பாராளுமன்றத்திற்கு பார்லிமென்ட் என்று பெயர் வந்தது.download

சாவியை வளையத்தில் மாட்டும் பழக்கத்தை முதலில் கையாண்டவர்கள் ரோம் நாட்டினர். திருமணத்தின்போது அவரவர் சக்திக்கேற்ற உலோகத்தில் வளையம் செய்து அதில் ஒரு சாவியை மாட்டி மணமகன் மணமகளிடம் கொடுப்பானாம். அந்த வளையத்தில் என் வீடு மானம் இவற்றின் சாவியை உன்னிடம் அளிக்கிறேன் என்று எழுதப்பட்டிருக்குமாம்.getimage

அர்த்த சாஸ்திரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அது அதர்வண வேதத்திலிருந்து தோன்றியது. எழுதியவர் வியாசர். இதே பெயரில் வேறொரு நூல் சாணக்கியரால் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அது பொருளாதாரத்தைப் பற்றியது.images

டென்னிஸ் விளையாட்டின் மூலப் பிறப்பிடம் பிரான்ஸ்,  டென்னிஸ் என்ற சொல் பிரெஞ்சு சொல்லான ´ டெனஸ் “என்பதிலிருந்து மருவியது. இச்சொல்லுக்கு சரியான அர்த்தம்” பிடி “ என்பதே.  இது ஆரம்பக்காலத்தில் மன்னர்களின் விளையாட்டாக இருந்தது. பண்டைய கவிஞர்களான ஜான் கோவர்  [ 1399 ] சாசர் ஆகியோரின் கவிதைகளிலும் இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.taj mahal

காதலின் சின்னமான தாஜ்மஹாலின் வெளிப்புறம் முழுவதும் மெக்கரீனா என்ற மார்பிள்களால் ஆனது. உட்புறம் தரைப்பகுதி முழுவதும் பேட ராடுயூரா என்ற இத்தாலி வகை மொசைக் கற்களால் ஆனது. கலை மற்றும் சித்திர வேலைப்பாடுகள் அனைத்தும் அந்தக்கால இந்தியர்களின் கைவண்ணத்தால் செய்யப்பட்டது. எனினும் அவர்களின் பெயர்கள் வரலாற்றில் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை.

 

Advertisements

4 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s