ஆஹா தகவல்

bell

1876 அம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். அதனால் இன்றும் கனடாவில் உள் நாட்டுத் தொடர்புகளுக்கு கட்டணம் கிடையாது.download (6)

நாடகத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு கிரீஸ்.  ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கியதும் கிரீஸில்தான். ஜன நாயகம் பிறந்ததும் அங்கேதான். உலக மஹாகவி என போற்றப்படும் ஹோமர் வாழ்ந்ததும் கிரீஸில்தான்.download (5)

சாக்ரடீஸ் இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றப்போது அவரது வயது 80. மைக்கேல் ஏஞ்சலோவின் பல புகழ்பெற்ற ஓவியங்கள் அவரது 80வது வயதில் தீட்டப்பட்டவை.E_1419491237

ஜப்பானில் உள்ள புத்தர் கோயில் ஒன்று முழுவதும் மரத்தினால் கட்டப்பட்டுள்ளது. தெற்கு ஜப்பானின் நாராவில் ‘ ஹார்யூ ஜி ‘ என்னும் இந்த புத்தரின் கோயில் உள்ளது. இது 607ல் கட்டப்பட்டது. ஒரு கூரை மீது மற்றொரு கூரையை வைத்து பார்ப்பதற்கு கிறிஸ்துமஸ் மரம் போன்ற வடிவில் இந்த புத்தர் கோயில் இருக்கிறது.  இதற்கு வர்ணம் பூசப்படவில்லை. மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் வார்னிஷ் கொண்டு பாலிஷ் செய்து இயற்கை அழகு கெடாமல் பளபளப்பாக்குகின்றனர்.siren2

நம் நாட்டில் உள்ள ஆறு ஏரி குளம் குட்டையில் உள்ள சாதாரண மீன்கள்  பாட்டெல்லாம் பாடாது. ஆனால் மீன் வகைகளில் ‘ சைரன் மீன் ‘ என்று ஒரு வகை மீன் இருக்கிறது. இது ஏற்படுத்துகிற சத்தம் பாடுகிறார்போல் இருக்கும். பற்கள் உராயும்போது ஏற்படுகிற சத்தம் மாதிரி இந்த மீன் பாடுவது  இருக்குமாம்.download (2)

எந்த விலங்கையாவது காட்டு யானை கொன்று விட்டால் உடனே நீரோடைக்குச் சென்று குளித்த பிறகுதான் மறுபடியும் உணவு சாப்பிட ஆரம்பிக்கும்.d3

திமிங்கிலங்கள் ஒரு முறை சுவாசித்த பின் 80  நிமிடங்கள் வரை சுவாசிக்காமல் தண்ணீரின் அடியில் தாக்குப் பிடித்து வாழும். இவை தங்கள் இரையைத் தேடி கடலின் 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் ஆழத்திற்கு செல்லும் ஆற்றல் உடையவை. இது எந்த பாலூட்டிகளினாலும் அடைய முடியாத இலக்காகும்.902951933_3d37c36afa

முதன் முதலாக 1756 ம் ஆண்டு ஜெர்மனியில் பெர்லின் நகரில் சாக்லேட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

 

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s