சோளிங்கர் நரசிம்மர் கோயில்

b65bd80c-83be-41ab-9355-662e1013a718_S_secvpf

பெருமாள் எடுத்த அவதாரங்களிலேயே சிறப்புப் பெற்றது நரசிம்ம அவதாரம்தான். வேலூர் மாவட்டம் கடிகாசல மலையில் யோக நரசிம்மராக அருளுகிறார். இண்டு ஒரு கடிகை  [24 நிமிடம் ] இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.T_500_542

பிரகலாசனுக்கு பெருமாள் நரசிம்மராக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசிக்க விரும்பிய வாமதேவர்   வசிஷ்டர் காஷ்யபர் அத்திரி ஜமதக்னி கவுதமர் பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் இத்தலத்தில் தவமிருந்தனர். விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மரை வழிபட்டதன் பயனாக பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். அதேபோல் தங்களுக்கு நரசிம்மரின் தரிசனம் கிடைத்தால் மோட்சம் எனக் கருதினர். ஆனால் இந்த ரிஷிகளை காலன் கேயன் என்ற அரக்கர்கள் தொந்திரவு செய்தனர்.

ரிஷிகள் தங்களைக் காக்க பெருமாளை வேண்டினர். பெருமாள் ஆஞ்சனேயரிடம் ரிஷிகளுக்கு உதவும்படி கூறினார்.  இவர் பெருமாளிடமிருந்து சங்கு சக்கரத்தை வாங்கிவந்து அரக்கர்களைக் கொன்று ரிஷிகளை காப்பாற்றினார்.  பின்னர் ரிஷிகளின் தவம் தடையின்றி தொடர்ந்தது.  பெருமாளும் அவர்களுக்கு  நரசிம்மராக காட்சி கொடுத்தார். அவர் அங்கு யோக நரசிம்மராக அருளுகிறார்.சோளிங்கர்

இங்கு மூலவர் யோக நரசிம்மர் 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருளுகிறார்.  இவரை தரிசிக்க 1305 படிகள் ஏற வேண்டும். மலையிலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ள சோளிங்கரில் உற்சவர் பக்தவத்சலர் சுதாவல்லிக்கு தனிக்கோயில் உள்ளது. அமிர்தவல்லி தாயார் தக்கான் குளம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.download

ரிஷிகளைக் காக்க வந்த ஆஞ்சனேயர் பெரிய மலை எதிரில் 406 படிகள் கொண்ட சிறிய மலையில் தனி கோயிலில் அருளுகிறார். இவர் யோக நிலையில் முன்னிரண்டு கரத்தில் ஜபமாலையும் பின்னிரண்டு கரத்தில் சங்கு சக்கரமும் ஏந்தியுள்ளார். சதுர்புஜ யோக ஆஞ்சனேயர் என்ற திரு நாமம் கொண்ட இவரது கண்கள் பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடியை பார்த்தபடி அமைந்துள்ளது.

இத்தலத்தை பேயாழ்வார்   திருமங்கை ஆழ்வார் நாத முனிகள் திருக்கச்சி நம்பி ராமானுஜர்  மணவாள் மாமுனிகள் பாடியுள்ளனர். பெருமாளின் 108 திருப்பதிகளில் இத்தலமும் ஒன்று. large_145823436

மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டுவோர்  திருமணத்தடை உள்ளவர்கள் வியாபாரம் செழிக்க விரும்புவர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி யோக நரசிம்மரையும்  யோக ஆஞ்சனேயரையும் வழிபட்டு கீழ் கோயிலில் அன்னதானம் செய்கிறார்கள்  இங்கு தானம் செய்தால் கயாவில் தானம் செய்த புண்ணீயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.  பௌர்ணமி நாளீல் மலைக்கோயிலை கிரிவலம் வருகிறார்கள்

வேலூரிலிருந்து திருத்தணி வழியில் 60 கிமீ    சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக 125 கிமீ.

Advertisements

One thought on “சோளிங்கர் நரசிம்மர் கோயில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s