பிடிவாதம்

download

அடர்ந்த காட்டின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அவன் வசித்து வந்தான். பிராணிகளிடம் தயை உள்ளவன். ஒரு முறை அவன் ஒரு மான் குட்டியை கண்டெடுத்து அதை அன்புடன் வளர்த்து வந்தான். ஒரு நாள் அந்த மான் குட்டி காணாமல் போயிற்று. அவன் மனம் பதைத்தது. மான் குட்டியை அபகரித்தவரைச் சும்மா விடக்கூடாது என்று எண்ணினான். அதற்காக இறைவனை மனமுருகப் பிரார்த்தித்தான். இறைவனும்  அவன் முன் தோன்றி “ என்ன வேண்டும் “ என்று கேட்டார். இவனோ “ எனது மான் குட்டியை அபகரித்தவன் என் கண் முன்னால் தோன்ற வேண்டும்  அவனை நான் பழி வாங்க வேண்டும் “ என்றான்.TN_144807000000

இறைவன் அவனிடம் “ நன்றாக யோசித்துச் சொல்  பின்னால் வருந்த நேரலாம். “ என்று பலவாறாக எச்சரித்தார். ஆனால் அவன் தன் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தான்.images

வேறு வழியின்றி  கடவுள் கையை உயர்த்தியதும் பயங்கரமாக உறுமிக்கொண்டு சிங்கம் ஒன்று அவன் முன் தோன்றியது. அதைக் கண்ட அவன் “ ஐயோ தெரியாமல் கேட்டுவிட்டேன். என்னை காப்பாற்றுங்கள்  “ என்று அலறிக்கொண்டே ஓடினான். தேவையில்லாத பிடிவாதங்கள் மென் மேலும் சிக்கல்களை உருவாக்கிவிடும் என்பது அவனுக்குப் புரிந்தது.

 

Advertisements

2 thoughts on “பிடிவாதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s