கங்கெளர்

download (1)

மொழி மற்றும் உடையலங்காரங்களில் வேறுபாடுகள் பலவற்றைக் கொண்டிருந்தாலும் வழிபாட்டு மரபில் பெரும்பாலும் ஒத்த தன்மையைக் கொண்டிருப்பது நமது தேசம். அதன் அழகான அடையாளங்களில் ஒன்று கங்கெளர் திருவிழா.

வினாயகச் சதுர்த்தியின்போது வினாயகர் சிலைகள் செய்து பூஜித்தபின் நீர் நிலைகளில் கரைத்து விடுவது நாம் அறிந்த மரபு. வங்காளத்தில் காளி பூஜையும் இதேபோன்று கொண்டாடப்படுகிறது.  சிவன் பார்வதி சிலைகளும் இப்படி அமைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு நீரில் கரைப்பதான விழாதான் கங்கெளர்images (1)

குளிர்காலம் முடிந்து கோடைக்காலத்தின் துவக்க மாதமான சித்திரையில் [ வட இந்திய மரபிலான சைத்ர மாதம் ] கொண்டாடப்படுவது இந்தத் திருவிழா. இதன் நாயக நாயகியர் சிவன் பார்வதி.  கங் என்றால் சிவபெருமான்.  கௌர் என்றால் கௌரி என்ற பார்வதி.  களி மண்ணால் அமைக்கப்பட்ட சிவ பார்வதி சிலைகள் தான் இந்த விழாவின் பிரதான மூர்த்திகள். சில குடும்பங்களில் மரத்தாலான சிலாரூபங்களையும் செய்து வைத்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அதற்குப் புதிதாக வண்ணம் தீட்டி பூஜையில் பயன்படுத்தும் வழக்கமும் காணப்படுகிறது.gangor

இவ்விழா தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே புதிய சிவன் பார்வதி பொம்மைகளை வாங்கி அவற்றை பூஜித்து வருகிறார்கள்.  விழாவன்று பெண்கள் விரதமிருந்து  அவற்றுக்கு சிறப்பு பூஜை செய்கிறார்கள். பின்பு ஒவ்வொருவரும் அதை தமது தலைகளில் வைத்து தூக்கிச் சென்று பொது இடம் ஒன்றில் வைத்து ஆடல் பாடல்களில் ஈடுபடுகின்றனர். மறு நாள் காலை மீண்டும் அப்பொம்மைகளுக்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி அவற்றை நீர் நிலைகளில் கரைத்துவிட்டு வீடு திரும்பி உணவருந்தி விரதத்தை நிறைவு செய்கின்றனர். images (2)

கைகளில் மெகந்தி இட்டுக்கொள்வது  களி மண்ணால் ஆன பானையில் சிறிய துவாரங்களை இட்டு அதனுள் தீபம் ஏற்றி அதைத் தலையில் வைத்துக்கொண்டு மணமாக வேண்டிய இளம் பெண்கள் பாடியவண்ணம் செல்கிறார்கள். விழாவின் பத்தாம் நாளில் அந்தப் பானையை உடைத்து நீரில் சேர்த்து விடுகிறார்கள்.download

விழாவின் இறுதியில் தங்கள் தலையில் இந்தச் சிலைகளை சுமந்தபடி ஊர்வலமாகப் புறப்படுகிறார்கள். தண்ணீர் கரையில் சிலைகளை நிறுவி வழிபாடு நடக்கிறது. மூன்றாம் நாளில் சிவன் பார்வதி இருவரையும்  நேருக்கு நேர் பார்ப்பது போல் வைத்து வழிபாட்டுக்குப்பின் நீரில் சேர்த்துவிடுகிறார்கள். அதாவது மணமகளான கௌரி தன் கணவன் வீட்டுக்குச் செல்வதாகவும் அவளுக்கு பிரியாவிடை தருவதாகவும் இதன் பொருள்.  இதே நாளில் கேவார்  [ ghewar ] என்கிற இனிப்பு பதார்த்தை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஜெய்ப்பூரில் இது விசேஷமான இனிப்பு. உலகப்புகழ் பெற்ற விழாவாக ஜெய்ப்பூரில் கங்கௌர் கொண்டாடப்படுகிறது.

திருவிழாவின் இறுதி நாளில் நடைபெறும் ஊர்வலத்தில் ஒட்டகங்கள் யானைகள் மாட்டுவண்டிகள் குதிரைகள் என அலங்கார அணிவகுப்பு கண்களைக் கவரும். அதாவது கௌரியை கோலாகலமாக கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.images

இவ்விழா நடைபெறும் சமயம் இளம் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டியும்  திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் மற்றும்  ஆரோக்கியம் வேண்டியும் நோன்பிருந்து வேண்டி வழிபடுகின்றனர். இந்த விழா இராஜஸ்தானில் மிகப் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

Advertisements

2 thoughts on “கங்கெளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s