தூப தீப ஆராதனை

download (1)

எல்லாம் வல்ல இறைவனை வாயாரப்பாடி மனதார துதித்து அபிஷேகம் அர்ச்சனை அலங்காரம் ஆராதனை என்று கொண்டாடுகிறோம்.  இறைவழிபாட்டில் தூபம் இடுதல் மிகப்பெரிய புண்ணிய செயல். மயிலாடுதுறையில் வசித்த குங்கிலியக் கலிய நாயனார்  குங்கிலியப்புகை கமழச் செய்வதையே தம்முடைய திருப்பணீயாக மேற்கொண்டிருந்தார் என்று விவரிக்கிறது பெரிய புராணம்.

தூபம்   அறிவியல் உண்மைகள்thoopam

சுற்றுப்புறக் காற்று சாம்பிராணி புகையால் தூய்மையடைகிறது. வளிமண்டல மாற்றத்தினால் உணவு முறையால் ஏற்படும் கபத்தை நீக்கி மேலும் கபம் சேராமல் தடுக்கிறது.  நோய்க்கிருமிகள் கொசுக்கள் அழிகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் தலைக்குளித்தவுடன் தலையில் நீரேற்றம் உண்டாகாமல் தடுக்க சாம்பிராணி புகை போட்டுக்கொள்கிறார்கள். மனத்தை தூபக் கலமாக்கி அதில் அறச் சிந்தனைகளை நிரப்பினால் இறையருள் நம்மைச் சுற்றிலும் கமழும் என்பது தாத்பர்யம்.

அதுபோல் நம் உள்ளம் ஒரு தீபக்கலம்/ அதில் நற்குணம் நிரப்பி இறை சிந்தனையில் மனதை ஒருமுகப்படுத்த அது ஞானச்சுடராய் பிரகாசிக்கும். அப்போது இறைவன் ஆனந்தரூபியாகக் காட்சியளிப்பார்.

தீபாராதனை   அறிவியல் உண்மைகள்shri_natrajar

தீபாராதனை செய்யும்போது சிலையின் மின் கடத்தும் திறன் நிலைப்பட்டு இருக்கும். விக்கிரகத்தின் முன் உயர்ந்தும் தாழ்ந்தும் பக்க வாட்டிலும் தீபாராதனை செய்யும்போது அந்த ஒளியை நம் கண்கள் பார்க்கின்றன. இது கண்களுக்கான சிறந்த பயிற்சியாகவும் அமைகிறது.

தீபாரதனையின்போது கன்னங்களில் போட்டுக்கொள்கிறோம். கன்னம் மற்றும் உள்ளங்கையில் உள்ள நரம்பு முடிச்சுக்களுக்கு மூளை வயிறு மற்றும் இதயத்தோடு தொடர்பிருக்கிறது.  அதனால் இந்த மூன்று உறுப்புக்களும் சக்தி பெறுகின்றன. இனி கோயிலுக்குப் போகும்போது தீபாராதனையின் போது கண்களை மூடாமல் கண்ணார சேவித்து இறையருளோடு நல்ல பயன்களைப் பெறுவோம்.

கற்பூரத்தின் சிறப்புdownload

கற்பூரத்துக்கு மட்டும் ஏனப்பா அத்தனை மரியாதை? என்று வினவினான் மகன்  இறைவனின் அழகு திருக்கோலத்தை பக்தர்கள் கண்டு தரிசிக்க கற்பூரம் தன்னையே தியாகம் செய்வதால்தான் கற்பூரத்துக்கு இத்தனை மரியாதை என்று அப்பா சொன்னார்.

உலகில் மனிதப்பிறவி எடுத்த அனைவரும் கற்பூரத்தைப் போல அடக்கமும் தியாகமும் உள்ளவர்களாக வாழ்ந்து நல்ல காரியத்துக்காக தன்னையே தியாகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு உலகம் மதிப்பும் மரியாதையும் அளிக்கும் என்று புரிந்தால் அது இன்னமும் சிறப்பு இல்லையா?

Advertisements

One thought on “தூப தீப ஆராதனை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s