ஏகாதசியை விட உயர்ந்தது

download

விரதங்களிலேயே  மிகவும் உயர்ந்தது. பெருமாளுக்குரிய ஏகாதசி விரதம். ருக்மாங்கதன் என்ற மன்னன் இதை அனுஷ்டித்து  கோபக்காரனனான துர்வாச முனிவரையே அடக்கி வைத்த பாக்கியத்தைப் பெற்றான். இந்த விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்கள் பரமபதத்திற்கே செல்வார்கள் என்பது ஐதீகம்.

ஆனால் ஏகாதசியை விட உயர்ந்த விரதம் ஒன்று இருக்கிறது என்றால்  அது தான் துவாதசி. இது ஏகாதசிக்கு மறு நாள் வருவது. அம்பரீஷ மகரிஷி என்பவர் இதை அனுஷ்டித்தவர். ஏகாதசியை விட துவாதசி விரதம் இருப்பது கடினமானது.

ஏகாதசி விரதத்தை சாப்பிடாமலேயே அனுஷ்டிக்கலாம். சாப்பிடாவிட்டால் தூக்கம் வராது. அதிலும் இரவு சாப்பாடு இல்லையென்றால் அறவே தூக்கம் வராது. ‘ குத்துப்பட்டவன் கிடந்தாலும் குறை வயிற்றுக்காரன் கிடக்கமாட்டான்’ என்று கிராமத்து கலவடையே உண்டு.  காலியான வயிறுள்ளவனுக்கு தூக்கம் வருவதில்லை.images

ஏகாதசியன்று சாப்பிடாமல் தூங்காமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சாப்பிடாமல் இருப்பதால் தூக்கமும் வராது.  அதனால் இந்த விரதத்தை எளிமையான அனுஷ்டித்து விடலாம். ஆனால் துவாதசியன்று சாப்பிட்டு விரதம் முடிக்கவேண்டும். ஆனால் அன்று பகலில் தூங்கக்கூடாது. முதல் நாள் ஏகாதசியன்று பட்டினியோடு தூங்காமல் இருப்பதால் மறு நாள் சாப்பிட்டவுடனேயே அசதியில் கண்ணைக் கட்டிவிடும். அவ்வளவுதான்  குறட்டை விட்டு விடுவார்கள். ஏகாதசி விரதமிருந்தவர்கள் மறு நாள் சாப்பிட்டவுடன் பகலில் தூங்கிவிட்டால்  விரதத்தின் பலன் போய்விடும். என்பது சாஸ்திரம்,

ஆனால் இந்த விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. யார் ஒருவர் பசுவைக் காலால் எட்டி உதைக்கிறாரோ அவரது குடும்பம் அதன் பின் உருப்படவே செய்யாது. அந்த வீட்டில் நடக்கக்கூடாததெல்லாம் நடக்கும்.  குழந்தையின்றி போதல்  பெண்கள் வாழா வெட்டியாய் திரும்புதல் போன்றவை நடந்தால் அங்கே பசுதோஷம் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். இவர்களுக்கு ஒரு பரிகாரம் இருக்கிறது. ஆனால் அதுவோ மிகவும் கடுமையானது. பராசர ஸ்ம்ருதி என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள அந்த பரிகாரம்.download (1)

ஒரு நல்ல நாளில் நதி அல்லது கடல் உள்ள கோயிலுக்குச் சென்று புனித நீராட வேண்டும். தசமி  ஏகாதசி ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிடாமல் விரதம் இருக்கவேண்டும். துவாதசியன்று காலை 6.30 மணிக்குள் சாப்பிட்டுவிடவேண்டும். அன்று பகலில் கீதை ராமாயணம் மஹாபாரதம் படித்துக்கொண்டிருக்க வேண்டும். படிக்கத்தெரியாவிட்டால் கேட்கவாவது வேண்டும். மாலையில் விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லவோ கேட்கவோ வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் தூங்க வேண்டும்.  இதில் ஒன்று மாறினாலும் பசுவை மிதித்த குற்றத்துக்கு பிராயசித்தமே இல்லை. எனவே பசுவை பாதுகாப்பது நம் கடமை. அதை பராமரிக்க வேண்டுமே தவிர இம்சை மட்டும் செய்யக்கூடாது.

Advertisements

2 thoughts on “ஏகாதசியை விட உயர்ந்தது

  1. பசு மட்டுமல்ல நமக்கு துன்பம் செய்யாத எதையும் நாமும் துன்பப்படுத்தலாகாது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s