ஆஹா தகவல்

HGppWn

தாய்லாந்து  நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவின் போது  திருவாசகப் பாடல் ஒன்றினைத் தமிழில் பாடும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.download (3)

டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது. ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவானது.images (3)

மிக நீளமான இறக்கைகளை கொண்ட ஆல்பட்ராஸ் கடல் பறவை கிட்டதட்ட 90 கிமீ வேகத்தில் தினமும் 500 கிமீ உயரத்துக்கும் மேல் பறக்கக்கூடியது.download (1)

துப்பறியும் நாவலாசிரியர் அகதா கிறிஸ்டி எழுதிய எலிப்பொறி [ மவுஸ் ட்ராப் ]  என்ற நாடகம் 1952ல் அரங்கேறி 25 வருடங்களுக்குத் தொடர்ந்து மேடையேறி நாடக உலகில் பெரும் சாதனையை ஏற்படுத்தியது. இதில் பங்கேற்ற நட்சத்திரங்கள் 134 பேர் 41 நாடுகளில் நடைபெற்ற இ ந் நாடகத்தை ரசித்துப்பார்த்தவர்கள் 4 கோடி பேர்.stamp

காந்தியடிகளுக்கு பிளாஸ்டிக் அஞ்சல்தலை வெளியிட்டு கௌரவித்த நாடு பூடான். உலகிலேயே 45 நாடுகளின் தபால் தலைகளில் இடம்பெற்ற ஒரே மனிதர் காந்தியடிகள் மட்டுமே.download (4)

 

மத்திய நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களது உடைகளைச் சரியாக அணிய பலவிதமான ஊக்குகளைப் பயன்படுத்தி வந்தனர். எனினும் தற்போது உள்ளது போன்ற நவீன வடிவ ஊக்கு 1849 ல் தான் உருவாக்கப்பட்டது. நியூயார்க் நகரைச் சேர்ந்த “வால்டர் ஹன்ட்” இதை உருவாக்கினார்.  தனக்கு இருந்த 16 டாலர் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்காகவே இதை வால்டர் ஹன்ட் தயாரித்தார்.download (2)

ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் டிரைவர்ஸ் எறும்பு யானையையே பயமுறுத்தும்  பசி எடுத்தால் வேகமாகப் படையெடுத்துச் சென்று யானையை மூன்றே நாட்களில் தின்றுவிடும். இந்த எறும்புக்கூட்டத்தைக் கண்டால் யானைகள் பயந்து ஓடி நீருக்குள் அல்லது சேற்றுக்குள் ஒளிந்து கொள்ளும்.images (2)

ஆக்டோபஸ்  பிறக்கும்போது ஒரு ஈ அளவுதான் இருக்கும்VireoWhiteEyedEye01

பறவைகளுக்கு கூரிய பார்வை உண்டு. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் உண்டு. மேல் இமை மனிதர்களின் கண் இமையைப் போன்றது. கீழ் இமை தூங்கும்போது மட்டும் மூடிக்கொள்ளும். இது தவிர பக்கவாட்டு அலகின் அருகிலிருந்து துவங்கும் மெலிதான தோல் உண்டு. கண்களை ஈரப்படுத்தவும் காற்று மற்றும் அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் இத்தோல் உதவுகிறது.tumblr_lk7eno3YpH1qgc6fao1_500

அலெக்ஸாண்டர் டூமாஸ் என்ற ஆங்கில எழுத்தாளரிடம் ஓர் இளம் எழுத்தாளர் “ நான் அப்படி எழுதுவேன்  இப்படி எழுதுவேன்  ஷேக்ஸ்பியரைத் தூக்கி சாப்பிட்டுவிடுவேன் பெர்னாட்ஷாவைப் பிச்சை வாங்க வைப்பேன் “ என்ற ரீதியில் பேசினார். அலெக்ஸாண்டர் டூமாஸை பேசவே விடாமல் அந்த எழுத்தாளரே பேசிக்கொண்டிருந்து விட்டு “ இப்போது என்ன செய்யட்டும்?” என்று கேட்டார். டூமாஸ் “  ஒரு நல்ல வைத்தியரைப் பாருங்கள்” என்றார்.

 

 

Advertisements

4 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s