ஆயுசு பெருக சிரிங்க

images ‘ ஹியூமர் தெரபி ‘ என்ற பெயரில் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சிரிப்பு மருத்துவம் பற்றிய ஆராய்ச்சி  உலகின் பல மூலைகளிலும் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.  சிரிப்பதை ஒரு உடற்பயிற்சியாகக் கருதி தினமும் செய்து வந்தால் அன்றாட வாழ்வின் இறுக்கம் குறைந்து புத்துணர்வு பெறலாம். நோய்கள் நம்மை அணுகாது வளர்ந்த நாடுகளில் எல்லாம் ஹியூமர் தெரபி பிரபலமாகிக்கொண்டிருக்கிறது.images (2)

வயிறு குலுங்க சிரிக்கும்போது தசைகள் தளர்ந்து மனசு லேசாகி ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கிறது என்பதால் வெளி நாடுகளிலுள்ள கல்வி நிறுவனங்கள் சிலவற்றில் பாடம் தொடங்கும் முன் அரை நிமிடம் வயிறு குலுங்க சிரிக்கச் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதனால் மாணவர்களின் பதற்றம் குறைந்து ரிலாக்ஸ் ஆகி பாடத்தில் உற்சாகமாக கவனம் செலுத்த முடிகிறது.images (1)

நோய்களை குணமாக்கும் ஆற்றல் மட்டுமல்ல் நோய்களை தடுக்கும் சக்தியும் சிரிப்புக்கு உண்டு என்கிறது ஒரு மருத்துவம் ஆய்வின் முடிவு. நாம் சிரிக்கும்போது இம்யூனோ குளோபுலின் ஜி அதிகரிக்கிறதாம். இவையும் மிக முக்கிய நோய் எதிர்ப்பு சக்திகள் தான். இந்த இம்மியூனோ குளோபுலிங்களை உருவாக்கும் வேலையைச் செய்வது எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ஒரு வகை செல்கள். நன்றாக வாய்விட்டுச் சிரிக்கிறவர்களின் உடலில் இந்த செல்களின் எண்ணிக்கை கணிசமாக உயருகிறது என்பது அறீவியல்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது.download

சிரிக்கும்போது உடலில் எண்டோர்பின் என்கிற இயற்கை வலி குறைப்பிகள் உருவாகின்றன. சிரிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்வதோடு இந்த எண்டோர்பிங்களும் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது.download

ஒரு குழந்தை சராசரியாக தினமும் 400 முறை சிரிக்கிறது. ஆனால் பெரியவர்களோ 15 முறைதான் சிரிக்கிறார்களாம். தினமும் குறைந்த பட்சம் 30 முறையாவது சிரிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

 

நன்றி    வசந்தா மாரிமுத்து   சிட்லபாக்கம்

Advertisements

3 thoughts on “ஆயுசு பெருக சிரிங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s