அசத்தல் செய்திகள்  

chair-jpg

சினிமாத் துறையில் மிக அதிகமான முறை தோன்றியுள்ள கதாபாத்திரம் சர் ஆர்தர் கொனான் டாயில்  [ SIR CONAN DOYLE ]  சிருஷ்டித்த ஷெர்லாக் ஹோம்ஸ் தான். 1900 முதல் 1980 வரை 61 நடிகர்கள் அப்பாத்திரத்தில் நடித்தனர். 175 படங்களில் ஹோம்ஸ் தோன்றினார்.flying fox

ஒரு வகை பழந்தின்னி வௌவாலையே நாம் பறக்கும் நரி என்று சொல்கிறோம். டிரோபஸ் என்ற இப்பழந்தின்னி வௌவால்களின் முக அமைப்பு  நரியை போன்று இருப்பதாலும் இதன் உடலிலுள்ள பழுப்பு நிற ரோமங்கள் நரியின் ரோமங்களைப்போல் இருப்பதாலும் இது பறக்கும் நரி என்றழைக்கப்படுகிறது. இதன் உடல் ஒரு அடி நீளமும் இறக்கைகள் ஐந்து முதல் ஆறு அடி நீளமும் கொண்டவை.பாரி-நாயினம்-thamil.co_.uk_

திருவாரூர் திருக்கோயிலில் மத்தளத்தைத் தலைக்கு  மேல் வைத்துக்கொண்டு சுவாமி புறப்பாட்டின் போது வாசிப்பது வழக்கம். இந்த முறை பூத நிருத்தம் என்று கூறப்படுகிறது. இது போன்றே இந்த கோயிலில் பாரி நாயனம் மட்டுமே இசைக்கப்படுகிறது.  மொத்தத்தில் இங்கு தியாகேசப் பெருமானுக்கு 18 வித வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.download

உலகிலேயே மிகவும் பெரிய சிறைச்சாலை ரஷ்யாவில் உள்ள கார்காவ் சிறைச்சாலையாகும். இங்கு ஒரே சமயத்தில் 40000 கைதிகளை  சிறை வைக்கலாம். உலகிலேயே மிகவும் சிறிய சிறைச்சாலை சார்க் தீவில் உள்ளது. இங்கே ஒருவரை மட்டுமே சிறை வைக்கலாம்..250px-திருவையாறு_சிவன்_கோயில்

திருவையாறு கோயிலில் மூலஸ்தானத்திற்குப் பின்னால் உள்ள திறந்த வெளிப்பிராகரத்தில் ஓம் என்று  ஒருமுறை ஒலி எழுப்பினால் ஏழு முறை ஓம் என்று எதிரொலி கேட்கும். பிரகாரச்சுவர்கள் அது போல் ஒலிக்கும்படி  எழுப்பப்பட்டிருக்கின்றன. உலகிலேயே எங்கும் இல்லாத அதிசயம் இது. முதல் எதிரொலியிலிருந்து சப்தம் சிறிது சிறிதாகக் குறைந்து உடனுக்குடன் எதிரொலிக்கும் நிகழ்ச்சி ஆச்சர்யமாக மெய் சிலிர்க்க வைக்கும்.6

நித்ய கல்யாணி செடியில் பூக்கும் பூ வெண்மை மற்றும் ரோஸ் நிறத்தில் இருக்கும். இதற்கு சுடுகாட்டுப்பூ என்று பெயர். இச்செடியில் எப்போதும்  பூ இருப்பதால் இது சதா புஷ்பி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நயனதாரா என்று மற்றொரு பெயரும் உண்டு. இச்செடி சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படும் மூலிகை செடியாகும்.

 

Advertisements

4 thoughts on “அசத்தல் செய்திகள்  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s