குட்டிக் கதைகள்

.யார் சிறந்தவர்?images (1)

துறவி ஒருவரை சந்தித்த அரசன் ஒருவன் “ தந்தை அரசன் இறைவன் மூவரில் யார் சிறந்தவர்? என்று கேட்டான். அதற்கு துறவி “ அரசே தந்தை பொன் போன்றவர். அரசனோ வெள்ளிக்கு ஒப்பானவர். இறைவனோ உணவு தானியம் போன்றவர்” என்றார். அப்படியானால் இறைவன் மதிப்பில் குறைந்தவர் என்று பொருள்தானே?” என்று கேட்டான் அரசன். “அரசே பொன்னும் வெள்ளியும் மதிப்பில் உயர்ந்திருந்தாலும் அவையில்லாமல் மனிதன் உயிர் வாழமுடியும் ஆனால் உணவு தானியமின்றி உயிர் வாழ முடியாது” என்றார் துறவி.

குருவின் வேலைdownload

குருகுல பாடம் முடிந்து ஊர் சென்ற சீடன் ஒருவன் மீண்டும் குருவிடம் வந்து தயங்கியவாறே “ குருவே தங்களிடம் நான் படித்ததெல்லாம் மறந்து விட்டது மீண்டும் அந்தப் பாடங்களை சொல்லிக்கொடுப்பீர்களா?” எனக் கேட்டான். “ இதற்கா இத்துணை தயக்கம் உட்கார் சொல்லித்தருகிறேன்” என்ற குரு சீடனுக்கு முதலில் இருந்து பாடங்களை சொல்லித் தந்தார்.

“ நன்றி குருவே பாடங்கள் நன்கு விளங்கிவிட்டன சென்று வருகிறேன்” எனக் கிளம்பிய சீடன் ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் குருவிடம் வந்து “ஸ்வாமி எனக்கு மீண்டும் பாடங்கள் மறந்து போய்விட்டன சொல்லித்தருவீர்களா?” எனக் கேட்க புன்னகைத்த குரு “ அதனாலென்ன  போதிக்கிறேன்” எனக் கூறி போதனையை ஆரம்பித்தார். சில நாட்களுக்குப் பின் நன்றி கூறி விடை பெற்றான் சீடன்.

அவன் போனதும் மூத்த சீடன் ஒருவன் “ குருவே அவன் மீண்டும் மீண்டும் வருகிறான் நீங்கள் சொல்லித் தந்துகொண்டே இருக்கிறீகளே இது முறையா? முட்டாளான அவனால் கிரகிக்க முடியவில்லை என்றால் அவனை வரவேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே?” என்றான்.

“ தரிசு பூமியாக இருந்தாலும் அந்த இடத்தைப் பதப்படுத்தி தண்ணீர் ஊற்றினால் விரைவில் விளை நிலமாக மாறிவிடும் அல்லவா? அதுபோலத்தான் அவனும் அவன் பதப்படும் வரை சொல்லிகொடுக்க வேண்டியது ஆசிரியரான என் கடமை” என குரு சொல்ல அவரது மேன்மை உணர்ந்தான் மூத்த சீடன்.

 

யார் செய்தது?

கொடுங்கோல் மன்னன் ஒருவன் செய்த அட்டூழியங்களை கோயில் சுவர்களில் ஓவியமாகத் தீட்டியிருந்தார் மகான் ஒருவர். மன்னனுக்கு பயங்கரக் கோபம் வந்தது. மகானிடம் அந்த ஓவியங்களைக் காட்டி இது நீ செய்ததா? என்று சீறினார். மகான் அமைதியாக இல்லை நீங்கள் செய்ததுதான் என்றார். மன்னர் வெட்கித் தலை குனிந்தான்.

எல்லோரும் நல்லவரே

மிகக் கொடியவன் ஒருவன் மகான் ஒருவரின் அறிவுரையைக் கேட்ட ஒரு வார காலத்திலேயே சன்னியாசம் பெற்றுவிட்டான். சீடர்களுக்கு மிகவும் ஆச்சர்யம். அவரிடமே விளக்கம் கேட்டனர். அப்போது மகான் ஒரு விதத்தில் பார்த்தால் நல்லவர்களைவிட குற்றவாளிகள் தான் சீக்கிரமாகப் பக்குவ நிலைமை அடைய முடியும். தங்களை நல்லவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு அது சுலபமாக சித்திப்பதில்லை என்றார்.

2 thoughts on “குட்டிக் கதைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s