நியூ[ஸ்]மார்ட்

download (4)

கேரளாவில் 35வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 77 கிலோ எடைப் பிரிவு பளு தூக்கல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றார். துப்பாக்கி சுடுதல் பிரிவில் விஜய்குமார் 2 தங்கப் பதக்கங்களை வென்று இருக்கிறார்.download (5)

ஆன்லைன் வர்த்தகத்தில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பொருட்களை வாங்குவது போலவே ரயில் பயணச்சீட்டையும் வாங்கலாம் என்று இந்திய ரயில்வே துறை அறிவித்து  சோதனை அடிப்படையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியும் உள்ளது. இதன்படி பயணச்சீட்டை ஐந்து தினங்களுக்கு முன்னால் பதிவு செய்ய வேண்டும் கையில் பெறும்போது பணத்தைக் கொடுத்தால் போதும். பயணச்சீட்டை பதிவு செய்ய சாதாரண வகுப்பு படுக்கை வசதி கொண்ட சீட்டுக்கு 40 ரூபாயும்  குளிர்சாதனப் பெட்டிகளில் சீட்டுக்கு 60 ரூபாயும் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சேவையை  www.bookmytrain.com என்ற இணையதளம் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.download (2)

ஊட்டியில் முத்தொரை என்ற இடத்தில் மத்திய அணுசக்தித் துறை கட்டுப்பாட்டில் ரேடியோ வானியல் மையம் இயங்கி வருகிறது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவும் வானியல் மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.download (3)

சூரிய காற்றின் வேகம் குறைவதால் கால நிலையில் அசாதாரண குளிர் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. இங்கே உள்ள டெலஸ்கோப்பை உலகின் மிக நீண்ட டெலஸ்கோப்பாக்கி ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் பணிகள் மத்திய அணுசக்தித் துறை மற்றும் இஸ்ரோ உதவியுடன் நடைபெற்று வருகிறது.download (1)

பாலச்சந்திர நெமடே மகாராஷ்டிர மானிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர். இந்த வருடம் ஞானபீட விருது இவர் எழுதிய ‘ இந்து ‘ என்ற நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது.novak

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடை பெற்ற க்ரான்ட்ஸ்லாம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை செர்பியா நாட்டின் நோவக் ஜோகோவிக் வென்றார். டென்னிஸ் விளையாட்டில் உலகத்தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இவர் ஐந்தாவது முறையாக இந்த பட்டத்தை வென்றிருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் வீரர் அண்டி மர்ரேயை எதிர்த்து மூன்றரை மணி நேரத்துக்கு மேல் விளையாடி இந்த வெற்றியை பெற்றார்.download

தாய்லாந்து நாட்டில் யானை மசாஜ் மிகவும் பிரபலம். மசாஜ் செய்து கொள்ள விரும்புவரை தரையில் படுக்க வைத்து அவர் மீது ஒரு டவல் போடப்படுகிறது.  பின்னர் யானை அவர் மீது காலை வைத்து அதன் பயிற்சியாளர் சொல்வதற்கு ஏற்ப தனது நம்பிக்கை மற்றும் முன்னங்கால்களால் மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து விடுகிறது. உடல் வலியெல்லாம் பறந்து விடுமாம். தைரியமாக படுத்த பிறகு எழுந்து ஓடவோ  அலறவோ கூடாது. அவ்வளவுதான்.

 

Advertisements

One thought on “ நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s