சூரிய நமஸ்காரம்

download (1)

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பினும் அனைவரும் கண்ணார சேவிப்பது சூரியன் சந்திரனை மட்டுமே. நவகிரங்களின் தலைவரான சூரியனே நம் வாழ்வில் ஆரோக்கியம் அளிப்பவர். சூரியனை வழிபடுவதால் கண்கள் பிரகாசமடையும். உடல் நலன் மேம்படும். தினசரி எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூரிய நமஸ்காரம் செய்து ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

சூரிய நமஸ்காரம் செய்பவனுக்கு பார்வைக்குறைவு ஏற்படுவதே இல்லை. என்பார் சுவாமி சிவானந்தர் குறிப்பாக அதிகாலை வேளையில் சூரிய உதயத்தின் போது இதைச் செய்வதுதான் மிகவும் சிறந்தது.

சீலமாய் வாழ சீரருள் புரியும்

ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

சூரியா போற்றி சுதந்திரா போற்றி

வீரியா போற்றி வினைகளைக் களைவாய்

எனச் சொல்லி சூரியனை வழிபடலாம்.download

அறிவியல் உண்மைகள்:—  நுரையீரல் தூய்மையடைந்து  சீரான பிராணவாயு செல்வதால் சுவாசம் மேன்மையடையும்.

முடி உதிர்தல் இள நரை கட்டுப்படுவதால் ஹேர் டை தேவையில்லை.

அழகான உடலமைபு கிட்டும்

தைராய்டு சுரப்பிகள் நன்கு வேலை செய்யும்

ஜீரண சக்தி மேம்படும்  மலச்சிக்கல் நீங்கும்

மன உளைச்சல் சரும வியாதிகள் நீங்கிவிடும்

ஞாபகசக்தி மேம்படும்

சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் நாள் முழுவதும் நீடிப்பதால் செய்யும் வேலை சிறப்பாக நடக்கும்.

கோயில் நமஸ்காரம்

அஷ்டாங்க நமஸ்காரம் [அ] சாஸ்டாங்க நமஸ்காரம்.  ஆண்களுக்காக முறையிது. தலை இரு கைகள் இரு காதுகள்  மார்பு இரு முழங்கால்கள் ஆகிய எட்டு அங்கங்களும் நிலத்தில் படுமாறு விழுந்து வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம்.

பஞ்சாங்க நமஸ்காரம்

இது பெண்களுக்கான முறை  தலை இருகைகள் இரு முழங்கால்கள் ஆகிய ஐந்தும் நிலத்தில் படுமாறு விழுந்து வணங்குதல்.

ஆண்கள் என்றாலும் பெண்கள் என்றாலும் மேற் கூறிய நமஸ்காரங்களை கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் செய்யக்கூடாது. ஏனென்றால் ஒரு புறம் நாம் தலையை வைத்து நமஸ்கரிக்கும்போது கால் இன்னொரு மூர்த்தம் நோக்கி நீண்டு அனர்த்தமாகிவிடும். அதனால் கொடி மரத்துக்கு வெளியே மட்டுமே கடவுளை நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

Advertisements

2 thoughts on “சூரிய நமஸ்காரம்

  1. ஒரு உடற்பயிற்சி எத்தனை நன்மைகளைத் தருகிறது வியப்பாக உள்ளதல்லவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s