வித்தியாசமான மண நாள் கொண்டாட்டம் 

???????????????????????????????

இம்மாதம் 13ம் தேதி என் பெரிய பெண்ணின் பத்தாவது வருட திருமண நாள். அதனை வித்தியாசமாக கொண்டாட நினைத்தனர்.  எங்கள் வீட்டிலிருந்து ஐந்து கிமீ தூரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் ஒரு பாகமாக இயங்கிவரும் ஆஷ்ரியா ஹோம் என்ற அனாதை பிள்ளைகளின் ஆசிரமத்தில் இருக்கும் 20 ஆண் பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவும் ஒரு ஜதை ஆடைகளும் கொடுத்து கொண்டாட முடிவு செய்தோம்.

DSC06375

இந்த ஆசிரமம் அந்த அரசு பள்ளியோடு இணைந்தது. அந்தப் பள்ளியில் தான் இவர்கள் பயிலுகிறார்கள்.  சுமார் ஆறு வயதிலிருந்து பதினாலு வயது வரை உள்ள பிள்ளைகள் இருக்கிறார்கள். சிலருக்கு மட்டும் தாயோ  அல்லது தந்தையோ எவரோ ஒருவர் மட்டுமே உள்ளனர்  அவர்களாலும் தனியாக இவர்களை வளர்க்க முடியாமல் இங்கு அனுப்பியுள்ளனர். இதற்கு  ஸ்ரீ சத்ய சாயி சேவா மையத்தின்  அங்கத்தினர்களும் தங்களால் முடிந்த விதத்தில் பணமாகவோ பொருளாகவோ கொடுத்து உதவுகிறார்கள்.

DSC06366

நாங்கள் அனைவரும் மாலை சுமார் 6.45 க்கு அங்கு போய் சேர்ந்தோம்.  அந்தக் குழந்தைகள் எல்லோரும் வரிசையாக அமைதியாக உட்கார்ந்து காத்திருந்தனர்.  சில பஜனைப் பாடல்களும்  ஸ்லோகங்களும் பாடிக்காட்டினார்கள். பிறகு அவர்களுக்கான ஆடைகள் வழங்கப்பட்டன. பிறகு என் பெண்ணும் மாப்பிள்ளையும் அங்குள்ள பிள்ளைகளில் மிகச் சிறியவனான தருண் என்ற பையனுடன்  இன்னும் 4 நாட்களில் பிறந்த நாள் வரும் விஷ்ணு என்ற பையனுடனும் கேக் வெட்டி மகிழ்ந்து அனைவருக்கும் பங்கிட்டார்கள்.    எல்லோருக்கும் உணவும் வழங்கப்பட்டது.  அதன் பிறகு நாங்களும் அங்கேயே சாப்பிட்டோம்.

DSC06389

உலகில் எத்தனையோ செல்வந்தர்கள் மழலைச் செல்வம் கிட்டாமல் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த மழலைகளுக்கோ செல்வம் இல்லை.  ஆனால் அவர்களுக்கும் ஒளிந்திருக்கும் திறமைகளோ ஏராளம்.  ரமேஷ்  நரேஷ் என்ற இரண்டு சிறுவர்கள் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவு வரை சென்றிருக்கிறார்கள்  அவர்கள் ஜெயித்த மெடல்களை அங்கு பார்வைக்கு வைத்துள்ளனர். அவர்களின் ஓவியத் திறமை எங்களை திகைக்க வைத்தது. அவர்கள் வரைந்த சித்திரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிலர் ஜோக் சொல்வதும், சிலர் அவர்களுக்கு பிடித்த ஹீரோவின் வசனங்களை அதே போல் ஏற்ற இறக்கத்தோடு ஒப்புவிப்பதும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இவர்களது திறமை குடத்தில் இட்ட விளக்காக இருக்காமல் உலகத்திற்கு காண்பிக்கப்படவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை.

DSC06359

அவர்களுக்கு வேண்டியவர்கள் யாரோ வந்ததுபோல் அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் எங்களுடன் மிக சந்தோஷமாக இருந்தார்கள். அதையும் மீறி அவர்கள் கண்களில் தெரிந்த ஓர் ஏக்கம் எங்கள் மனதை கனக்க வைத்தது என்றால் அது மிகையில்லை.  நாங்கள் ஒரு வேளை அவர்களுக்கு உதவியது  சேது பந்தனத்தில் அணிலின் சேவைதான்.  ஆனால் ஒரு நல்ல காரியம் செய்ய முடிந்ததே என்ற திருப்தியுடனும்  அவர்கள் ஏக்கம் தீர்ந்து வரும்  நாளில் அவர்களுக்கு ஒரு நல்ல விடியல் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடனும் இரவு ஒன்பது  மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

Sarva-Dharma-Logo

Advertisements

2 thoughts on “வித்தியாசமான மண நாள் கொண்டாட்டம் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s