பாம்பின் கால்

wallmed2

ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் ராமனுக்கு சுக்ரீவன் நண்பனாகிறான். அண்ணன் வாலியிடமிருந்து தன் மனைவியை மீட்கவேண்டுகிறான். அப்போது சுக்ரீவன் “ பிரபோ யார் ஒருவர் இங்குள்ள அந்த ஏழு மரங்களை ஒரே பாணத்தால் துளைக்கிறாரோ  அவரால்தான் என் அண்ணனை யுத்தத்தில் வெல்ல முடியும்” என்றான். ஆனால் அந்த ஏழு மரங்களும் வெவ்வேறு கோணத்தில் வளர்ந்திருந்தன.Rama_Meets_Sugreeva

அப்போது லட்சுமணன் இதில் ஏதோ மர்மமும் சூட்சமும் உள்ளது என்று நினைக்கிறான். உடனே ராமனை நோக்கி “ அண்ணா நாம் முதலில் அந்த இடத்தின் அருகில் சென்று பார்க்கலாம்” என்றான்.498adhiseshan_f

லட்சுமணன் முந்திய யுகத்தில் ஆதிசேஷன் அம்சமாக அவதரித்திருந்ததால் தன் காலின் ஸ்பரிசத்தால் பூமிக்கு அடியில் ஒரு பாம்பு படுத்திருப்பதை உணர்கிறான். அது வாசுகி என்ற நாகம் பாற்கடலில் அம்ருதம் கடைந்தபோது பல ஆண்டுகளாக பூமிக்கடியில் படுத்துவிட்டது. காலப்போக்கில் அதன் மேல் காடுகள் வளர்ந்து அதன் ஏழு வளைவுகள் மேல் ஏழு மரங்கள் முளைத்திருந்தன. பாம்புகள் எப்போதும் சுருண்டு அல்லது வளைந்துதான் படுக்கும். ஆதிசேஷன் அவதாரமான லட்சுமணனுக்கு யோகவித்தை தெரியும். அதன்படி அவனுக்கு பூமிக்கடியில் படுத்து உறங்குவது யார் என்று தெரிந்துவிட்டது.im0805-48_kurma

பிறகு ராமனிடம் சொல்கிறான். “ அண்ணா இந்த இடத்தின் மகிமை எனக்குப் புரிகிறது. நீ வில்லையும் அம்பையும் தயார் நிலையில் வைத்துக்கொள். நான் சொல்லும்போது பாணத்தை விடு” என்கிறான்.  லட்சுமணன் தன் கால் கட்டைவிரல் ஸ்பரித்தால் பூமியை அழுத்துகிறான். அப்போது வாசுகி பாம்பு பூமியின் மேல் ஆதிசேஷன் என்கிற தன் நண்பன் தனக்கு ஏதோ சமிக்ஞை செய்கிறான் என யூகித்தது. வெகுகாலம் படுத்து இருந்ததால் வாசுகி சோம்பல் முறித்தது. ஏழு வளைவுகளில் படுத்திருந்த பாம்பானது அப்போது ஒரே நேர்கோட்டில் வந்தது. உடனே அதன் மேல் வளர்ந்த ஏழு மரங்களும் ஒரே நேர்கோட்டில் வந்தன.ramabow

அப்போது ராமனைப் பார்த்து லட்சுமணன் சைகை காட்ட ராமன் ஒரே அம்பினால் அந்த மரங்களைத் துளைத்தான். பிறகு சோம்பல் முறித்த வாசுகி பாம்பு திரும்பவும் பழைய நிலைக்கு வந்த பின் மரங்களும் பழைய நிலைக்கே வந்தன.

வாசுகி பாம்பு ஆதிசேஷனான லட்சுமணனின் கால் ஸ்பரிசத்தை அறிந்து செயல்பட்டதால் ‘ பாம்பின் கால் பாம்பறியும்’ என்ற வழக்கு வந்தது.

 

உபன்யாசம்     திரு கல்யாணராமன்

4 thoughts on “பாம்பின் கால்

 1. வணக்கம்
  அம்மா.
  பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிக்கு இப்போதுதான் தங்களின் பதிவு வழி கருத்தை அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி அம்மா
  மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. நானும் முதல் தடவையாக தெரிந்துகொள்கிறேன் நமக்கு தெரியாதவை எவ்வளவு உள்ளது என்பது வியப்பாக உள்ளது

 2. சாதாரண வழக்கில் இருக்கும் ஒரு பழமொழிக்கு இப்படியொரு அர்த்தம் உள்ளது இப்போதுதான் தெரிந்தது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s