வடை மோகம்

download (2)

குழந்தைகளுக்கு கதை சொல்லுவது என்றால் அந்த நண்பருக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் காக்கா நரி கதை சொல்கிறார் என்றால் தானே காக்காவாகவும் நரியாகவும் மாறி மாறி மோனோ ஆக்டிங் செய்தபடி கதையை விவரிப்பார். வாயில் ஈ நுழைவது தெரியாமல் குழந்தைகள் வியந்து மகிழ்ந்து கேட்பார்கள்.

நண்பருக்கு காக்காவிடமும் நரியிடமும் இத்தனை பரிவும் பாசமும் ஏற்பட்டது எப்படி?  யோசித்ததில் நண்பருக்கும் இரண்டையும் விட இவற்றை இணைக்கும் வடை மீதுதான் அத்தனை உயிர் என் கிற விஷயம் உறைத்தது. “ நீ ஒரு பாட்டுப்பாடேன்” என்று நரி தந்திரமாகக் கேட்க அசட்டுக் காக்கா ஆலாபனையை ஆரம்பிக்க வடை கீழே விழ………….  சம்பவம் நடந்த இடத்தில் மட்டும் நண்பர் இருந்திருந்தால் நரியை முந்திக்கொண்டு வடையை கவ்வியபடி ஓடியிருப்பார்.vadai

ஓட்டலுக்கு செல்லும்போதெல்லாம் நண்பர் விரும்பிச் சாப்பிடுவது இட்லி தோசை வகையறாக்களைவிட மெதுவடை  மசால் வடை  சாம்பார் வடை  ரச வடை தயிர் வடை  கீரை வடை என வடையறாக்களைத்தான்.

ஒரு நாள் ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் அடுத்த நாள் லஸ் ஆஞ்சனேயர்  இன்னொரு நாள் மந்தவெளி மசூதி தெரு ஆஞ்சனேயர் என்று டைம்டேபிள் போட்டு அனுமன் கோயில்களுக்கு விசிட் அடிப்பார். எப்படியும் ஏதாவது ஒரு கோயிலில் யாராவது ஒரு பக்தர் ஆஞ்சனேயருக்கு வடை மாலைக்கு ஏற்பாடு செய்திருப்பார்.  நண்பர் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு பயபக்தியுடன் பிரசாதம் வாங்கி சுவைப்பார். “ சார் அனுமார் கோயில் வடைக்கு அப்படி ஒரு அலாதி டேஸ்ட் உண்டு தெரியுமா?  மிளகு வாசத்தோடு அந்த மொறமொறபு இருக்கே…………………… அடாடா  சும்மா டஜன் கணக்குல உள்ளே போகும்” என்று சிலாகிப்பார்.download

ஒரு நாள் சார்  இனிமே எங்கே ராமாயணக் கதை நடந்தாலும் போயிடறதா இருக்கேன். ராமர் கதை கேட்க ஆஞ்சனேயரும் தப்பாமல் வந்து உட்காருவார்னு சொல்றாங்களே  அப்படின்னா யாராவது பக்தர் அவருக்கு வடைமாலை சாத்துவார்தானே/  என்று கண்கள் மின்ன நண்பர் சொன்னபோது அவரது உச்சக்கட்ட வடை பிரேமை வெளிப்பட்டது.

“புத்திர் பலம் யசோதைர்யம் நிர்ப்யத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்ப்டுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத்பவேத்….”

என்ற ஸ்லோகத்தை நண்பருக்கு சொன்னேன்download (1)

புத்தி பலம் புகழ் உறுதிப்பாடு அஞ்சா நெஞ்சம் ஆரோக்கியம் விழிப்பு வாக்குவன்மை இத்தனையும் தரக்கூடியவர் ஆஞ்சனேயர்   ராமனுக்கு பரம பக்தனாக இருக்கும்போதே பரம ஞானியாகவும் அவர் விளங்கியதையும் அர்ஜூனனின் தேர்க் கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை அவர்  நேரில் கேட்டதையும்  ‘ நவ வ்யாகரண வேத்தா ‘ என்று ராமனே புகழும் அளவுக்கு பெரிய கல்விமானாக அவர் திகழ்ந்ததையும் நண்பருக்கு விளக்கினேன்.

“ எல்லாம் சரி  ஆஞ்சனேயரும் என்னை மாதிரியே வடைப் பிரியராக ஆனது எப்படி? அதைச் சொல்லவே இல்லையே “ என்று கேட்டார் நண்பர்.

ஊஹூம்  …………………சிலரைத் திருத்தவே முடியாது.

 

நன்றி     சக்தி விகடன்

 

Advertisements

2 thoughts on “வடை மோகம்

 1. வணக்கம்
  அம்மா
  சிந்தனைக்குஅறிவான கதை.. பகிர்வுக்கு நன்றி
  எனதுபக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: காதலும் காவியம்படைக்கட்டும்:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s