அக்கமஹாதேவி குகை

download

கி பி பன்னிரண்டாம் நூற்றாண்டு கர்னாடகத்தின் ஷிமோகா மாவட்டத்தில்  உடதடி என்ற ஊரில் வாழ்ந்தது ஒரு செல்வந்தர் குடும்பம். செல்வ வளமும் சிவபக்தியும் நிறைந்த அந்தக் குடும்பத்தில் பேரழகுடன் பிறந்தது ஒரு பெண் குழந்தை. மஹாதேவனான ஈசன்மேல் மாறாத அன்புகொள்ளப்போகிறால் என்பதை உணர்ந்தோ என்னவோ மஹாதேவி என்றே பெயரிட்டார்கல் குழந்தைக்கு.  வளர வளர் அவளது அழகும் அதிகரித்துக்கொண்டே போனதை கண்கூடாகக் கண்டார்கள் எல்லோரும்.  மஹாதேவியின் மனதுக்குள்ளோ மல்லிகார்ஜூனரின் திரு நாமம் மட்டுமே வளர்ந்தது.AkkaMahadevi

அழகு என்றாலே அதற்கு ஆபத்து வரத்தானே செய்யும்? வந்தது அப்பிரதேச மன்னன் கௌசிகன் வடிவில்.  எழிலரசியாகத் திகழ்ந்த அவளை தனதரசியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டான். சிவமே சிந்தையில் இருந்ததால் மறுத்தாள் மஹாதேவி. அவளைப் பணியச் செய்ய அவளது பெற்றோரை மிரட்டினான் அரசன். பெற்றோரின் துன்பம் கண்ட மஹாதேவி சில நிபந்தனைகளுடன் மன்னனை மணம் செய்து கொண்டாள்.

தான் சில பூஜைகள் செய்து முடிக்கும்வரை தன்னைத் தொடக்கூடாது என்ற அவளது நிபந்தனைக்கு இணங்கிக் காத்திருந்தான் மன்னன்.  நாட்களோ மாதம் வருடம் என ஓடின. மஹாதேவியின் பூஜைகளோ இன்னும் தொடர்ந்தன.Akka_mahaadevi

ஒரு கட்டத்தில் மன்னனது மோகம் கோபமாகி அதே வேகத்துடன் மஹாதேவியை நெருங்கினான். வெருண்ட அவள் “  நீ இன்னுமா என் பக்தியைப் புரிந்து கொள்ளவில்லை?  உனக்கு தேவை என் உடல்தானே ….” என்று கூறிவிட்டு தன் ஆடையைக் களைய அவளது தலைமுடி வேகமாக வளர்ந்து உடலெங்கும் பரவி மறைத்தது. கணப்பொழுதில் கணுக்கால் வரை நீண்டு வளர்ந்த கூந்தல் கண்டு அரண்டு போன அரசன் அவளது காலில் விழுந்து வணங்கினான்.Akkamahadevi_Udathadi1

அரண்மனையை விட்டு வெளியேறிய மஹாதேவி சிவனடியார்களுடன் சேர்ந்து சிவத்தொண்டு புரியத் தொடங்கினாள். எல்லோரும் அவரை மரியாதையாக அக்கா என்று அழைக்க அவரது திரு நாமம் அக்கமஹாதேவி என்றானது. பின்னர் தனது வாழ்க்கை லட்சியமான மல்லிகார்ஜூனரை தரிசிக்கும் பொருட்டு ஸ்ரீசைலம் செல்கிறார்.  கரடுமுரடான வழிப்பாதை   மழை  குளிர் பனி வெள்ளம் எதுவும் அவரின் நீண்ட பயணத்திற்கு தடையாக வில்லை. இறுதியில் லிங்கரூபத்தில் தனது இறைவனை தரிசிக்கிறார். சுமார் 400 பாடல்களை மல்லிகார்ஜூனர்மேல் இயற்றினார்.Akka mahadevi caves 3

அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஒரு குகையில் 100 ஆண்டுகள் தவம் செய்து சிவஜோதியில் கலந்தார். இன்னும் ஸ்ரீ சைலம் பகுதியில் கிருஷ்ணா நதிக்கரையின் வனப்பகுதியில் அக்கமஹாதேவியின் குகைகளை தரிசிக்கலாம்.

Advertisements

One thought on “அக்கமஹாதேவி குகை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s