திருப்தி

images

ஒரு ஜெர்மன்காரர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தார். அப்போது ஒரு கோயிலுக்கு சென்றார். அங்கு ஒரு சிற்பி புதிய சிலை ஒன்றை செய்து கொண்டிருந்தார். அதன் அருகில் அதே போல் செய்து முடித்திருந்த ஒரு சிலையும் இருந்தது.  “ அது ஏன் ஒரே மாதிரியாக இரு சிலைகள்”? என வியந்த ஜெர்மானியர் “ இந்த இரண்டையுமே பொருத்தப்போகிறீர்களா?” எனக் கேட்டார்.

“ இல்லை ஒன்றை மட்டுமே பொருத்தப்போகிறேன்”  “ அதுதான் ஏற்கனவே ஒன்றை செய்து முடித்துள்ளீர்களே பிறகு ஏன் இன்னொன்று?”   “ செய்து முடித்த சிலையின் மூக்கில் கீறல் விழுந்துள்ளது……………… அதனால்”கருங்கல்-சிலை

“சரி சிலையை எங்கு பிரதிஷ்டை செய்யப்போகிறீர்கள்?”  இருபது அடி உயரத்தில்  “ அந்த உயரத்தில் கீறல் யாருக்கு குற்றமாய் தெரியப்போகிறது”? “ எனக்கு………… என் கண்ணில் அது குற்றமாய் பட்டுக்கொண்டே இருக்கும்……………………… அதுதான்”

சிற்பியின் பதிலைக் கேட்ட ஜெர்மானியர் அவருடைய ஈடுபாடு கண்டு வியந்து கை குலுக்கினார். ஒரு வேலை செய்யும்போது அதில் நம் திருப்திக்கு உழைத்தோமானால் நமக்கும் மகிழ்ச்சி ஏற்படும். சுற்றியுள்ளவர்களும் மனமார பாராட்டுவர்.

4 thoughts on “திருப்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s