நியூ[ஸ்]மார்ட்

download

இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தனது 9வது பதிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.  இதில்  இந்திய சமையலறையில் நாம் பேசும் சொற்களான  கீமா   பாப்பட்  கறிலீஃப் உள்பட சுமார் 240 இந்திய சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  இந்த அகராதி தயாரிப்புப் பிரிவு தலைமை அதிகாரியான பாட்ரிக் ஒயிட் நூலை வெளியிட்டு கூறும்போது “ பல மொழிகளிலிருந்தும் பெறப்பட்ட சொற்களை  உள்ளடக்கிய ஓர் உலக மொழி ஆங்கிலம். அதேபோல இந்திய உணவும் உலகப் புகழ் பெற்றது. பல நாடுகளிலும் இச்சொற்கள் பேசப்படுகின்றன. அதைப் பிரதிபலிக்கும் விதமாக அவற்றை இந்த அகராதியில் சேர்த்துள்ளோம். இது வரை 1000 இந்திய சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன”  என்றார்.salt rock  hotel

ஈரானில் ஹிராஸ் பகுதியில் ஓர் உப்புச்சுரங்கம் உள்ளது. அதன் அருகில் ஓர் உணவகத்தை முழுவதும் உப்பாலேயே கட்டியுள்ளனர். சுவர் மேஜை நாற்காலி எல்லாமே பாறை உப்பால் செய்யப்பட்டவை தான். இந்தப் பொருட்களை மறு உபயோகம் செய்யலாம். உப்புக்குக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருப்பதால் வெளியில் இருந்து வரும் அசுத்தக்காற்றை வடிகட்டி சுத்தமான காற்றை உணவகத்துக்குள் அனுப்புவதாக சொல்கிறார்கள். இந்த வித்தியாசமான உணவகத்தைப் பார்ப்பதற்காகவே பலர் வந்துகொண்டிருக்கிறார்கள்akira

அகிரா என்பவரை உலகின் டாப் 10  ஹீரோக்களில் ஒருவராக சி என் என்  கவுரவித்துள்ளது. கம்போடிய காடுகளிலும் வயல்களிலும் சாலைகளிலும் லட்சக்கணக்கான கண்ணிவெடிகள் ஒரு காலத்தில் புதைக்கப்பட்டன. அந்த கண்ணிவெடி தாக்குதல்களுக்கு இதுவரை 30 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். ஏராளமானவர்கள் கை கால்களை இழந்திருக்கிறார்கள்  மக்களைக் காப்பாற்ற நினைத்த அகிரா கடந்த 22 வருடங்களாக தனி ஒருவராக அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஒரு குச்சி சிறிய கத்தி கட்டிங் பிளையர் ஆகியவற்றை வைத்து இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றியிருக்கிறார்   அகிராவின் சேவையைப் பார்த்த அரசாங்கம் கண்ணிவெடிகளை அகற்றும் வேலையை வழங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு பள்ளியை நடத்தி வருகிறார் அகிரா. மனித உயிர்களைக் காப்பாற்றி வருகிற பணிக்காக உலக நாடுகளில் இருந்து பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.frank islam

பிராங்க்  இஸ்லாம்  உத்தரப் பிரதேச மானிலத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.  15 வயதில் வெறும் 500 டாலர்களுடன் அமெரிக்கா சென்றார். தொழி முனைவோராக படிப்படியாக முன்னேறினார். இன்று இவர் மிகப் பெரிய தொழில் அதிபர். ஏராளமான நன்கொடைகள் வழங்குதல் மற்றும் பல்வேறு கல்வி கலாச்சார அமைப்புகளில் உறுப்பினராக சமூக நலப்பணிகள் என செய்து வருகிறார். மார்ட்டின் லூதர்கிங் வழியில் நற்பணிகல் செய்து வரும் இவருக்கு அண்மையில் கவுரமிக்க மார்டின் லூதர்கிங் ஜூனியர் விருது வழங்கப்பட்டுள்ளது.download (7)

சென்ற மே மாதம் இந்தியாவிலிருந்து இரு நூறு கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்களில் ஈக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து மாம்பழ இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.  தற்ப்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. இந்திய மாம்பழங்களான மிகப்பெரிய சந்தையாக ஐரோப்பா இல்லாவிட்டாலும்கூட இந்தத் தடையால் உள்ளூர் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்பட்டது.download (1)

திரைப்பட இயக்குனர் வஸந்த் இயக்கி வரும் ‘ சிவரஞ்சனியும் சில பெண்களும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பிரபல பாடகி சுதா ரகுநாதன்.  கர்னாடக இசைப்பெண்களின் நடை முறை வாழ்க்கையை சித்தரிக்கும் படமாக இது இருக்குமாம்.

Advertisements

2 thoughts on “ நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s