அசத்தல் செய்திகள்  

download - Copy

அணில்களில் 250 வகைகள் உண்டு. நிலத்தில் வாழும் அணில்   மரத்தில் வாழும் அணில்  பறக்கும் அணில் என மூன்று பிரிவுகள் உண்டு. பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை இவை ஒரு தடவையில் 4 குட்டிகள் வரை போடும். இதன் ஆயுட் காலம்  6 ஆண்டுகள்.download (2)

உலகப் பிரசித்திப் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினுக்கு தன்னிடம் பத்து வருடங்களாக செயலாளராக இருப்பவரின் பெயர் உடனே  நினைவுக்கு வந்து கூப்பிட முடியாதாம். அத்தனை மறதி மிகுந்தவர்.New-Species-Discovered-Sp-005

நியூகிணி தீவிலுள்ள ஒரு சிலந்தி  மரங்களுக்கு இடையில் எட்டு அடி நீளம் கொண்ட பெரிய வலைகளைப் பின்னுகிறது. மீனவர்கள் இதை அப்படியே எடுத்துக்கொண்டு போய் மீன் பிடிக்க பயன்படுத்துகின்றனர். அரை கிலோ எடையுள்ள மீன்களைத் தூக்கும் அளவிற்கு அந்த வலை உறுதியாக உள்ளதாம்.download (1) - Copy

மும்பை பைகுல்லாவிலுள்ள மிருகக் காட்சி சாலையில் விரைவில் இடம் பெறப்போகும் புதிய பறவை பெங்குவின்கள்    3 ஜோடி ஆண் பெண் பெங்குவின்களை வாங்க இதற்காக 2.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் பராமரிப்புக்காக 19 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.sri-nammalwar-madhurakavi-alwar

பார்வை இழந்த மதுரகவி என்பவர் சூரியனை துதித்து நூறு பாடல்கள்  இயற்றி மீண்டும் பார்வை பெற்றதாக புராணச்செய்தி   அவர் அருளிய பாடல்களே சூரிய சதகம் என புகழ் பெற்றது. இந்த சூரிய சதகம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலய சுவரில் கல்வெட்டாக பதிக்கப்பட்டுள்ளன.inari-wood-tokugawa-era-in-the-Musee-guimet-paris

ஜப்பானில் அரிசிக்குத் தனி மரியாதை அளிக்கின்றனர். ஜப்பானியர்கள் நெல்லுக்கு என ஒரு கடவுளை உருவகப்படுத்தினர். இந்த கடவுளுக்கு இனாரி என்று பெயர்  இங்கு ஒவ்வொரு கிராமத்திலும் நெல் கடவுளுக்காக கோயில் கட்டியுள்ளனர். வாகன நிறுவனங்களின் பெயர்களும் நெல் அரிசி மரியாதை தரும் வகையில் சூட்டப்பட்டுள்ளன.  ஹோண்டா என்ற சொல்லுக்கு முதன்மையான நெல் வயல் என்பது பொருளாகும். டோயோடா என்றால் செழிப்பான நெல்வயல் என்று அர்த்தம். பிரபலமான ஜப்பானிய பெயர்களில் பல அரிசி தொடர்புடையதாக இருக்கும். ஜப்பானிய முன்னாள் பிரதமரான புகுடாவின் பெயருக்கு செழிப்பான வயல் என்று அர்த்ததாம்.

 

4 thoughts on “அசத்தல் செய்திகள்  

    1. சுவாரஸ்யமான தகவல்கள் தான் அசத்தலாக இருக்கும் மிகவும் நன்றி தனபாலன்

  1. மிகவும் நன்றி தனபாலன் உங்கள் கவிதை ஏளனம் அருமை ஆனால் என் பின்னூட்டம் அதில் பதிவாகவில்லையே ஏன்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s