தாரா தாரிணி

taratarini - Copy

தசமஹா வித்யா தேவியரில் இரண்டாவதாக குறிப்பிடப்படுபவள் ஸ்ரீ தாரா. இவள் தோன்றிய வேளையை தாரா ராத்ரி என்றே குறிப்பிலும் சாக்த நூல்கள்.. இந்த தாரா தேவியே ஸ்ரீ ராமனாக அவதரித்தாள் என்கிறது  தோடலதந்திரம். புத்த மதத்தினரின் வழிபாட்டில் சொல்லப்படும் வஜ்ரஞ்சனி எனப்படுபவள் இந்த தாரா தேவியே என்றும் சொல்கிறார்கள். முக அரிதாகவே தாராவுக்கான ஆலயங்கள் அமைந்துள்ளன. அப்படியொரு ஆலயம் ஒடிசா மானியல்த்தில் உள்ள தாரா தாரிணி கோயில். இங்கே தாரா காளி இருவரையும் சேர்ந்து வழிபடுகிறார்கள்.

ஒடிசா மானிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூருக்கு அருகில் பூர்ணகிரி மலைத் தொடரில் அமைந்துள்ளது மா தாரா தாரிணி கோயில்.   Panchama Berhampur Siddha Binayak Temple Odisha - Copyதந்தை தட்சன் நடத்திய யாகத்துகு அழையாத விருந்தாளியான பார்வதி அங்கு சென்று அவமானப்பட்டு கோபத்தில் அந்த யாக அக்னியில் விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள். பார்வதி தேவியின் மார்பு விழுந்த இடமே இந்த இடம்.

பிருஹத் சம்ஹிதை என்னும் நூல் இந்த முக்கியமான நாலு சக்தி பீடங்களைப் பற்றி விவரிக்கிறது.

  1. பாதம் விழுந்த இடம் பூரி ஜகந் நாதர் ஆலயம். 2. ஸ்தனங்கள் விழுந்த இடம் பெர்ஹாம்பூர் ஒரிசா மானிலம். 3 யோனி விழுந்த இடம் காமாக்யா அஸ்ஸாம்.  4 முகம் விழுந்த இடம்  கொல்கத்தா மேற்கு வங்காளம்.Tara Tarini - Jagannath, Hand ari, - Copy

இந்த பெர்ஹாம்பூரில் அமைந்துள்ள தாரா தாரிணி ஆலயத்தில் இரண்டு கல்லால் ஆன முகம் போன்ற அமைப்பு கடவுளாக வணங்கப்படுகிறது. இந்த கற்சிலைகளுக்கு தங்கத்தால் ஆன நகைகள் பூட்டியும் பித்தளை கவசமும் பொருத்தியிருக்கிறார்கள். உலோகத்தாலான இரு முகங்களையும் நடுவே காண்கிறோம். இதுதான் உற்சவ விக்ரகங்கள்  இங்கு வணங்கப்படும் தெய்வமே தாரா தாரிணி. ஆதிசக்தியே இவர்கள் தாரா தாரிணி என்று கொண்டாடுகிறார்கள். இந்த ஆலயத்தைச் சுற்றி ஓடும் ரிஷிகுல்யா நதி கங்கையின் மூத்த சகோதரி என்று ரிக் வேதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.download - Copy

இந்த கோயில்  6000 வருடங்கள் பழமையானது மஹாபாரதத்தில் குருக்ஷேத்திரம் யுத்தம் ஆரம்பிக்கும் முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜூனனிடம் யுத்தத்தில் வெற்றி கிட்ட இந்த தேவியை வேண்டிக்கொள் என்று கட்டளை இட்டதாகவும் அதன்படியே வேண்டிக்கொண்டு யுத்தம் செய்து பாண்டவர்கல் வெற்றியைப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.MVC-014S - Copy

இந்தக் கோயில் முக்கியமான நாலு சக்தி பீடங்களில் ஒன்றாக விளக்குவதால் தேவி உபாசகர்களால் மிகவும் போற்றப்படுகிறது. மேலும் அப்போது இங்கு இருந்த சாக்தர்களும் பௌத்தர்களும் தங்களுடைய தாந்திரிக வழிபாட்டுக்கு சிறந்த இடமாக இதை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த கோயிலில் தியானத்தில் இருப்பது போல் அமைந்துள்ள புத்தர் சிலை இதற்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது.taratarini-temple - Copy

இப்போதுள்ள கோயில் கட்டப்பட்டதற்கு ஒரு செவி வழிக் கதை உண்டு. கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஜகன் நாதபூர் கிராமத்தில் வசித்த பாசு பிரகராஜ் என்னும் கல்வியில் சிறந்த பிராமணன் புத்திரப்பேறு இன்றி வருந்தினாராம். ஒரு சமயம் அவன் வீட்டுக்கு இரண்டு சகோதரிகள் வந்து சில காலம் தங்கியிருந்தனர். திடீரென்று அவர்கள் ஒரு நாள் காணாமல் போய்விட்டனர். அவன் கனவில் தேவி தாரா தாரிணி தோன்றி தானே அவ்விதம் அவன் வீட்டில் வந்து தங்கியிருந்ததாகவும் தனக்கு ஒரு கோயில் எழுப்பும்படியும் கட்டளையிட்டுள்ளாள். இந்த உத்திரவு கிடைத்தபின் பாசு பிரகராஜ் அவர்கள் சென்ற வழியில் தேடிச்சென்று கடைசியில் சிதிலமடைந்த பழைய தாரா தாரிணி ஆலயத்தை கண்டுபிடித்து மறுபடியும் அதை மிகச் சிறப்பான கோயிலாக உருவாக்கினான் என்றும் சொல்கிறது இந்தக் கதை.maingate_taratarini - Copy

சித்திரைப் பிரபா சித்திரை மேளா சித்திரை யாத்திரை போன்றவை இங்கு கொண்டாடப்படும் பண்டிகைகளில் சிறந்தவை.  சித்திரை மாத செவ்வாய்க்கிழமை தோறும் திங்கள்  நள்ளிரவு 1 மணி முதல் செவ்வாய் இரவு 11 மணிவரை அம்பிகையை தரிசிக்கமுடியும்  இந்த சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள்.  இவை தவிர தசரா நவராத்ரி தீபாவளி சங்கராந்தி போன்ற பண்டிகைகளும்  எல்லா செவ்வாய்க்கிழமைகளும் இங்கு விசேஷம்.3040-281034-taratarini2 - Copy

 

செல்லும் வழி    பெர்ஹாம்பூர் ரயில் நிலையத்திலிருந்து 32 கிமீ பேருந்து மற்றும் டாக்ஸி வசதி உண்டு.

நன்றி     தீபம்

Advertisements

2 thoughts on “தாரா தாரிணி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s