காந்திஜி நினைவு நாள்

images

இன்று ஜனவரி 30 காந்திஜியின் நினைவு நாள்  அவரைப் பற்றிய சில செய்திகள்

காந்தி குளிக்காத குற்றால அருவிKutralam_Falls

1934 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்திருந்த காந்தியடிகள் குற்றாலம் சென்றிருந்தபோது அங்குள்ள நண்பர்கள் காந்திஜியை குற்றால அருவியில் குளிக்கும்படி வற்புறுத்தினார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் குளிக்க முடியாத இந்த அருவியில் தானும் குளிக்கமாட்டேன் என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதன்பிறகு தமிழகத்தில் 1938ம் ஆண்டு ராஜாஜி மந்திரி சபை வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் குளிக்கக்கூடாது என்ற தடைச் சட்டம் நீக்கப்பட்டது.

கடிகாரம் அமைதியானதுdownload

மகாத்மா காந்தி உபயோகித்த கடிகாரம்  ‘INGERSOL TUMIP POCKET WATCH’ பாக்கெட் வாட்சுகளை உருவாக்கியவர்கள் ஜெர்மானியர்கள். தங்க முலாம் பூசப்பட்ட பாக்கெட் கடிகாரங்கள் அன்று பிரபுக்களின் தனி அடையாளமாகக் கருதப்பட்டது. அதன் விலையும் அதிகம். 1908ல் அந்த நிறுவனம் லண்டனில் தன் விற்பனையை துவக்கியது. இதில் நொடி முள் கிடையாது. லண்டனில் காந்தியிடம் வந்து இணைந்த கடிகாரம் இறுதி நிமிடம் வரை அவருடனேயே இருந்தது. நடுவே ஒரு முறை ரயிலில்  வரும்போது காந்தியிடமிருந்து ஒருவன் திருடி விட்டான். காந்தி துயரமடைந்தார். ஆனால் திருடியவன் சில நாட்களிலேயே அவரைத் தேடி வந்து கடிகாரத்தை திரும்ப ஒப்படைத்து விட்டான். காந்தி சுடப்பட்டபோது கடிகாரம் தரையில் விழுந்து ஓடாமல் அப்படியே நின்றுவிட்டது. அப்போது மணி  மாலை 5.17  அதன் பிறகு அந்தக் கடிகாரம் ஓடவே இல்லை.

 

நன்றி   மங்கையர் மலர்

Advertisements

2 thoughts on “காந்திஜி நினைவு நாள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s