மீனவர்களின் குல தெய்வம்

Kalijai-Temple-chilka

தீவின் நடுவே வீற்றிருந்து தன்னை நாடும் பக்தர்களின் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு சொல்லி வருகிறாள் காளி அன்னை. ஒரிஸா மானிலத்தில் ‘சிலிகா’ என்ற பிரம்மாண்டமான ஏரி அமைந்துள்ளது. அதன் நடுவே குட்டிகுட்டியாக பல தீவுகள் உள்ளன. அதில் ஒன்றில்தான் காளி ஜெய் என்றழைக்கப்படும் காளியம்மனுக்கு கோயில் அமைந்துள்ளது.  அன்னையின் பெயரிலேயே “ காளி ஜெய் மாதா “ என்றே தீவும் அழைக்கப்படுகிறது.Kalijai-Goddess

காளி ஜெய் மாதா மீனவர்களின் குல தெய்வமாகப் போற்றப்படுகிறாள். இந்த ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சுற்றுலாப் பயணிகள் எனப் பலர் இவளை தினமும் தரிசித்துச் செல்கின்றனர். இந்த அன்னை இங்கு கோயில் கொண்டது சம்பந்தமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

ஒரு சமயம் திருமணம் முடிந்து புதுமணத் தம்பதியர் தங்கள் உற்றார் உறவினர்களுடன் இந்த ஏரியில் மூன்று படகுகளில் அக்கரைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெரும் சுழல்காற்று வீச மூன்று படகுகளும் குப்புர கவிழ்ந்தன. மணப்பெண் நீருக்குள் மூழ்க மற்றவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். மணப்பெண்ணை இழந்த துயரத்தில் அனைவரும் கண்ணீர்வடித்துக் கதறினர். திருமணம் நடந்த நாளிலேயே மனைவியைப் பறிகொடுத்த வருத்தத்தில் பித்துப்பிடித்தவன் போல் காணப்பட்டான் புதுமாப்பிள்ளை. நாட்கள் கடந்தன.download

ஒரு நாள் அவன் கனவில் மரித்துப்போன மணப்பெண் தோன்றினாள். அவனை ஆறுதல் படுத்தி “ஏரியில் நான் மூழ்கிய இடத்துக்கு அருகில் உள்ள தீவில் கோயில் எழுப்பி என்னை காளியாக பாவித்து பூஜை செய்து வா  உன்னையும் சுற்றுப்புற கிராம மக்களையும் மீனவர்களையும் என்னை வந்து வழிபடுவோரையும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறேன்” என்று கூறி மறைந்தாள்.download (1)

விஷயத்தை அந்த ஊர் மக்களிடம் தெரிவித்து அவர்கள் உதவியுடன் மீனவர்களின் ஆதரவுடன் அந்தத் தீவில் ஒரு கோயில் எழுப்பினான் அவன். கருவறையில் தன் மனைவியின் நினைவாக அம்பாள் சிலையை நிறுவி அன்றாடம் பூஜைகள் நடத்தினான். இந்த ஆலயமே  “ காளி ஜெய் மாதா “ கோயில் என்றழைக்கப்படுகிறது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை  மகா மேளா என்ற திருவிழா அக்டோபர் மாதத்தில் நடைபெறும்  அன்று அம்பாளுக்கு அலங்கரம் ஆராதனை என்று அமர்க்களப்படும். கணவன் மனைவி உறவு பலப்படவும் ஆயுள் ஆரோக்கியம் கிட்டவும் திருமணத்தடை நீங்கவும் புத்திரபாக்கியம் பெறவும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் காளி ஜெய் மாதாவை வழிபட்டு ஏராளமான பக்தர்கள் பலன்பெறுகிறார்கள்.

Advertisements

2 thoughts on “மீனவர்களின் குல தெய்வம்

  1. நிஜம் தான் டிடி சிலது கோயில் நமக்கு தெரியும் அதன் வரலாறு மிகவும் அதிசயமாக இருப்பது தெரியாது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s