அடிக்கடி கரும்பைக் கடி

download

கரும்பு தின்னகூலியா?  எத்தனை இனிமையானது கரும்பு? ஆனால் பலருக்கும் அதை தின்ன சோம்பேறித்தனம் அதிகம் ஆனால் அதில் உள்ள பலன் களைத் தெரிந்துகொண்டால் நீங்களும் கரும்பை விட மாட்டீர்கள்.

கால்சியம் குரோமியம் புரோட்டீன் விட்டமின்ஸ் மக்னீசியம் பொட்டாசியம் இரும்புச்சத்து என கரும்பில் இருக்குற சத்துக்களை எண்ணிக்கிட்டே போகலாம். கரும்புச்சாற்றில் இருக்கும் புரோட்டீன் கிட்னி செயல்பாட்டுக்கும் கிட்னியில் கற்கள் வராமல் தடுக்கவும் பயன்படுத்தறதோட யூரினரி இன்ஃபெக்ஷன் வராமல் தடுக்கும்.download (2)

கரும்பில் இருக்கும் ஆண்ட்டிஆக்ஸிடன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோய் இருப்பவர்கள் அடிக்கடி கரும்பைக் கடிக்கலாம். தாகத்தை சட்டுனு தணிக்கும் நேச்சுரல் எனர்ஜி டிரிங்க்ஸ் நம்ம கரும்புதான்.

ஆலும் வேலும் போலதான் கரும்பும் உங்க பல்லுக்கு உறுதி சேர்க்கும். அதனால் வலுவான பல்லுக்கு உத்தரவாதம் வேணும் என்றால் அடிக்கடி கரும்பைக் கடிக்கலாம். செரிமானம் சருமப்பொலிவு இதுக்கெல்லாம் உதவியா இருக்குறதோட உங்க உடம்புல இருக்குற கெட்ட கொலாஸ்ட்ரால் டக் குன்னு குறையவும் கரும்பு சாப்பிடணும்download (1)

அதனால் ஜூஸா சாப்பிடுறதோட கடிச்சு மென்று சாப்பிட்டால் சத்துக்கள் எதுவும் வீணாகாமல் மொத்தமாக கிடைக்கும்

நன்றி    டயட்டீஷியன் பூங்கோதை

 

Advertisements

4 thoughts on “அடிக்கடி கரும்பைக் கடி

  1. பல்வேறு புத்தகங்களில் நீங்கள் படித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்வது புரிகிறது. ஆனால், அது வெளிவந்த பத்திரிகையின் பெயர் மற்றும் தேதி ஆகியவற்றையும் பகிர்ந்து கொண்டால்தான், நீங்கள் செய்யும் காரியம் பிறருக்கும் உதவிகரமாக அமையும். கூடியவரை, இதையும் பின்பற்றுங்கள்.

    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி நான் பதிவுகள் எழுத ஆரம்பித்தபோதே இதை நான் எழுதிவிட்டேன் பல புத்தகங்களில் நான் படிப்பதை எனக்கு மிகவும் பிடித்ததை உங்கள் அனைவருடனுடனும் பகிர்வதில் எனக்கு ஒரு திருப்தி மேலும் பகிர்வுகள் எழுதுவது எனது அன்றாட பொழுது போக்கு. எனினும் சிலவற்றிற்கு கீழே நன்றியையும் எழுதுவேன். உங்கள் அறிவுரையை முடிந்தவரை பின்பற்ற முயலுகிறேன் உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி திரு ராகவன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s