உண்மையான பக்தி

88_big

இறை வழிபாட்டைப் பற்றி எதுவும் தெரியாத வெட்டியான் ஒருவன் சுடுகாட்டில் கண்டெடுத்த சிவலிங்கத்தை அரசரிடம் ஒப்படைக்கச் சென்றான். மன்னரோ “சிவலிங்கம் உன்னிடமே இருக்கட்டும் சுடுகாட்டுச் சாம்பலையே அபிஷேகம் செய்து பழைய சோற்றைப் படைத்து கும்பிட்டு வா” என்று கேலியாகச் சொன்னார்.download

அப்படியே அனுதினமும் அந்த சிவலிங்கத்திற்கு ஆராதனை செய்துவந்தான் அவன். ஒரு நாள் கனமழை பெய்ததாலும்  எரிக்க உடலே வராததாலும் பூஜிக்க சாம்பல் கிடைக்காமல் பூஜை செய்ய முடியவில்லை.  வருந்தினான் அவன். “சிவ பூஜை செய்யாமல் இருக்கக்கூடாது  நான் இறக்கப்போகிறேன்  என் உடலை எரித்து அதில் கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு பூஜை செய்” என்று தன் மனைவியிடம் சொன்னான். ஆனால் அவன் மனைவியோ தன் உடலை எரித்துவிட்டு சாம்பலை எடுத்துக்கொள்ளுமாறு கூறி தீயில் விழுந்தாள்.download (1)

கணவன் மனைவி இருவரது பக்தியை மெச்சிய கடவுள் காட்சி அளித்தார். அவளுக்கு உயிர் கொடுத்தார். ஆண்டவனை வழிபட ஆடம்பரமோ மலர் மாலைகளோ வேண்டும் என்பதில்லை. உண்மையான பக்தி  உள்ளன்போடு இருந்தால் போதும் என்பதை உணர்ந்தார் அரசர்.

One thought on “உண்மையான பக்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s