அதியசமான அனுமன் தரிசனம்

DSC06697

எதிர்பாராமல் ஞாயிற்றுக்கிழமை காலை கிளம்பி ஹைதிராபாத் விமான நிலையம் போகும் வழியில்  சாகர் ரிங் ரோடு அருகில் உள்ள கர்மான் காட் என்ற இடத்திற்கு மிகவும் சக்திவாய்ந்ததும் புகழ் பெற்றதுமான அனுமன் கோவிலுக்கு சென்று வந்தோம். DSC06695

இது 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும்.  காக்கத்தீயர்கள் ஹைதிராபாத்தை ஆண்ட காலத்தில் வேட்டையாடப் போன ஒரு மன்னர்  ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்தெடுக்கொண்டிருந்தபோது அங்கே அடர்ந்த காட்டில் ராம நாமம் ஒலிப்பதைக் கேட்டு அங்கு சுற்றும் முற்றும் பார்த்து அமர்ந்த நிலையில் இருந்த அனுமன் சிலையைக் கண்டார். அதனை தொழுதுவிட்டு தலை நகருக்கு திரும்பினார்.  அதே இரவு அனுமன் அவர்க னவில் தோன்றி தனக்கு ஒரு கோயில் எழுப்பும்படி சொன்னார். அப்படி உருவானதுதான் இந்தக் கோயில்.download (2)

400 வருடங்களுக்குப் பிறகு மொகாலாய அரசை விரிவுபடுத்த எண்ணிய ஔரங்கசீப் பல இடங்களில் உள்ள கோயில்களை இடிக்கச் சொல்லி தனது படைகளை அனுப்பினான். ஆனால் இந்த கோயிலை மட்டும் யாராலும் நெருங்க முடியவில்லை. இச் செய்தியைக் கேட்ட ஔரங்கசீப் தானே அதை இடிக்க முன்வந்தபோது கடப்பாரை அவன் கையிலிருந்து கீழே விழுந்தது அவன் பயத்தால் உடல் நடுங்கினான்  அப்போது அசரீரியாக ஒரு குரல் வந்தது “இந்தக் கோயிலை இடிக்க வேண்டுமானால் உன் மனதை வலுவாக்கிக் கொள்” அதுவே இந்த இடத்தின் பெயராகிவிட்டது.  கர் மன் கட்  மருவி கர்மான் காட் என மாறிவிட்டது.  உள்ளே அமர்ந்த நிலையின் தியான அனுமன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Mandir todna hai rajan, to kar man ghat” (translation: “if u want to break down the temple king, then make your heart stronger”) which is why the place got the name kar-man-ghat. [2]DSC06700

சுற்றிலும் உள்ள சன்னதிகளில்  பல வகையான சிவலிங்கங்கள்,  ஸ்ரீ வேணுகோபாலசுவாமி,  ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பாலாஜி,  ஜெகன்னாத ஸ்வாமி,  நவக்கிரஹங்கள், வீணையுடன் மிக அழகாக வீற்றிருக்கும் ஸ்ரீ சரஸ்வதி தேவி  ஆகியோர் உள்ளனர்.  ஸ்ரீ சரஸ்வதி மண்டபத்தின் அருகில் நிறைய குழந்தைகளுக்கு அன்று அக்க்ஷராப்பியாசம் நடைபெற்றது. கோவிலை சுற்றிப்பார்க்க சுமார் அரைமணி நேரம் ஆனது.  அருமையான புளியோதரை லட்டு பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது மணி மதியம் இரண்டு.  மிக அருமையான தரிசனம் மனதிற்கு வெகு சுகமாக இருந்ததுDSC06686

 

Advertisements

2 thoughts on “அதியசமான அனுமன் தரிசனம்

  1. மிக அருமையான தரிசனம் எத்தனை தொழில் நுட்பம் வந்தாலும் பழையன எப்போதுமே ஒரு தனி அழகுதான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s