மங்களாதேவி

images

ஒடிஸா என்றதும் பூரி ஜகந்நாதர் ஆலயந்தான் நம்  நினைவுக்கு வரும். அங்கு நடைபெறும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றது. அந்த யாத்திரைக்கு முன் கிருஷ்ணர் பலராமர் சுபத்ரா சிலா ரூபங்களை வடிக்க ஆண்டுதோறும் மூன்று மரங்களைத் தேர்வு செய்வார்கள். அதற்குரிய மரம் எங்கே இருக்கிறது என்று குறித்துக் காட்டுபவள் மங்களாதேவி. அவள் கோயில் கொண்டுள்ள இடம் காகத்பூர்download (4)

இது ஒடிஸாவிலுள்ள பூரி  நகரத்திலிருந்தும் புவனேஸ்வர் நகரத்திலிருந்தும் அறுபது கி மீ. இந்தக் கோயில் சிறந்த சக்தி வழிபாட்டுத் தலமாக சக்தி உபாசகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலைப் பற்றி இங்கு சொல்லப்படும் கதைகள் அனேகம். ஒரு சமயம் ஒரு படகோட்டி இந்தக் கோயில் அருகிலுள்ள பிராசி நதியைக் கடக்க படகில் சென்றான். அப்போது  நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு படகில் செல்வதே மிகவும் கடினமாக இருந்தது. எப்படியோ சிரமப்பட்டு படகை ஓட்டிச்சென்ற அவனுக்கு பாதி ஆற்றைத் தாண்டிய பிறகு முன்னேற முடியவில்லை. படகு அப்படியே நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.download (1)அன்று இரவு அவனது கனவில் மங்களாதேவி தோன்றி படகு நிற்கும் இடத்துக்கு கீழே நதியில் தான் புதைந்து இருப்பதாக்வும் தன்னை எடுத்து பக்கத்தில் உள்ள இந்த காகத்பூரில் கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்யும்படியும் கூறினாளாம். அதன்படியே கண்டெடுக்கப்பட்ட சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர்.images (1)

காகத்பூர் என்று இந்த ஊருக்கு பெயர் வந்ததற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது,அம்மனை நதியிலிருந்து எடுத்த் இடத்தில் ஒரு காகம் தண்ணீருக்குள் சென்றதாகவும் அது பிறகு வெளியே வரவே இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆகையால் காக்கை மூழ்கிய இடம் அதாவது ஒரிய மொழியில் காட என்பது காகத்தையும் அட்க என்பது மூழ்கியது என்பதையும் குறிக்கும். ஆகையால் காக அட்காவூர் என்று அழைக்கப்பட்டு மருவி காகத்பூர் என்றாகியுள்ளது.download (2)

இங்கு நதியின் அருகிலேயே கருங்கல்லினாலான் ஒரு மேடை உள்ளது. இதில்தான் இந்த தேவி இந்தப் பூவுலகையெல்லாம் சுற்றி சஞ்சாரம் செய்துவிட்டு இரவில் சயனித்துக் கொள்வதாக சொல்கிறார்கள். அந்த மேடையும் பார்ப்பதற்கு உண்மையிலேயே உபயோகித்த ஒரு மெத்தை கசங்கி இருப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது.

இந்த மங்களாதேவி மிகவும் சக்தி வாய்ந்தவள். வருடா வருடம் வைகாசி மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் இங்கு தீ மிதி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஜாமு யாத்திரை என்பார்கள்.downloadதீ மிதிக்க வேண்டிக்கொண்டவர்கள் பிராசி நதியில் நீராடி ஒரு குடத்தில் அந்த நதியின் தண்ணீரை தங்கள் தோள்களில் வைத்துக்கொண்டு இங்கு பரப்பியிருக்கும் தீக்குழியில் நடந்து செல்கிறார்கள். இதில் பங்கேற்கும் எந்த பக்தருக்கும் தீயினால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. அவர்கள் வேண்டுதலும் நிறைவேறுகின்றன என்பது பக்தர்களின் அனுபவம்,

Advertisements

One thought on “மங்களாதேவி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s