அருவமாகக் காட்சி தந்த அங்காளி

download

பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவன் கொய்தபோது தோஷம் ஏற்பட்டு அது கபாலமாக அவரது கையில் ஒட்டிக் கொண்ட தருணம் அது. அந்த தோஷம் அகல ஊர் ஊராகச் சென்று ஆண்டியாக பிட்சை எடுத்தார் சிவபெருமான்.

அப்போது மாயவரம் அருகில் வல்லம்புதூர் எனும் ஊரை காவல்புரிந்து வந்தான் பாவாடைராயன். பொழுது சாயும் வேளையில் அங்கு புலித்தோல் ஆடையோடு திரிந்துகொண்டிருந்த ஈசன் மேல் சந்தேகம் கொண்டு அவரை சிறையில் தள்ளிப் பூட்டினான்.

மறு நாள்தான் அவர் சிவபெருமான் என்பதை உணர்ந்தான். அரனையே சிறையில் அடைத்ததால் ஏற்பட்ட சிவ நிந்தனை நீங்க அவரிடமே ஓர் உபாயம் வேண்டிக்கேட்டான் பாவாடைராயன்.download (2)

சிவபெருமான் “வடக்கில் ஆதிபுரிக்கு அருகில் உள்ள தலம் பனஞ்சாலை. அங்கு பனைமர நிழலில் காளிதேவி அருவமாக இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள். நீ அவளூக்கு காவலாக பணி புரிந்தால் உன் தோஷம் நீங்கும்” எனச் சொன்னார்.

அதன்படி பனஞ்சாலையை அடைந்தான். அருகே தடாகமும் அதனில் மலர்களும் செழித்து இருப்பதைக் கண்டு மகிழ்ந்து நீராடி பயபக்தியோடு காளியை வணங்கச் சென்றான்.

சிவன் சொன்னபடி பனைமர நிழலில் காளியின் சிரித்த குரலைக் கேட்டு அத்திசையை நோக்கி வணங்கினான்.

“ தாயே பல தலங்களில் உருவமாக இருக்கும் நீ இங்கு அருவமாகக் காட்சி தர என்ன காரணம்” என வேண்டினான்.

“காலம் கனியும் போது நான் வெளிப்படுவேன் அதுவரை இந் நிலையிலேயே என்னை வணங்கி வருக “ என தெரிவித்தாள் காளிதேவி.

பாவாடைராயன் தனது படை பட்டாளம் உற்றம் சுற்றம் என அனைவரையும் இங்கு கொண்டு வந்து குடியமர்த்தினான். அவன் மக்கள் குடிகொண்டபுரம் நாளடைவில் ராயன்புரம் என்று ஆகி பின் ராயபுரம்  என அழைக்கப்படுகிறது. அதனருகில் ஆதிபுரி என அழைக்கப்பட்ட தலம் திருவொற்றியூர் ஆகும். அன்று முதல் பாவாடைராயன் ராயபுரத்தில் காளிக்கு காவலனாக இருந்து பணி செய்து வருகிறான்.

புதியதாய் உருவான ராயபுரத்தில் குடியமர்ந்த மக்கள் காலப்போக்கில் காளிதேவிக்கு உரு கொடுத்து கோயில் கட்டி வழிபட வேண்டும் என விரும்பினார்கள். அதற்காக ஊர்கூட்டம் போடப்பட்டது. கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது திடீரென ஒரு சிறுவனை அம்மன் ஆட்கொண்டு ஊத்துக்காடு பாஞ்சாளர்களைக் கொண்டு கல் மண்டபம் கட்டி என் சிலையை வடித்து பிரதிஷ்டை செய்யுங்கள். மாசியில் நான் மயானக் கொள்ளை போகவேண்டும்” எனக் கூறினாள்.download (1)

ஆனால் அம்மன் குறிப்பிட்ட ஊத்துக்காடு பாஞ்சாளர்கள் பற்றியவிவரம் ஆரம்பத்தில் யாருக்கும் தெரியவில்லை. தெய்வ சங்கல்பம் உண்டானால் எல்லாம் தானாகவே நிகழும் என்பதை  நிரூபிப்பது போல் அப்போது ஊத்துக்காடு பாஞ்சாளர்கள் பிழைப்பைத் தேடி ராயபுரம் வந்தனர். அவர்களுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. “ இரவு பகலாக பணியாற்றி கல்மண்டபமும் சிலையும் செய்து தருகிறோம் ஆனால் சிவராத்திரி பூஜையும் மயானக் கொள்ளையின் போது அம்மனுக்கு பூஜை செய்யும் உரிமையும் எங்களுக்குத் தரவேண்டும் மற்ற நாட்களில் நீங்கள் பூஜை செய்துகொள்ளுங்கள்” எனக் கேட்டனர். ஊராரும் ஒப்புக்கொண்டனர்.

அதன்பிறகு அம்மனுக்கு அழகான ஆலயம் எழுப்பப்பட்டு அதில் அவள் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. படிப்படியாக வளர்ந்து வந்த கோயில் கி பி 1818ம் ஆண்டு சுப்பாச்சாரி என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.

கருவறையில் அங்காள பரமேஸ்வரி  நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அங்காளி என்பது இவளுக்கு வழங்கும் மற்றொரு பெயர் அம் என்றால் அழகு என்று அர்த்தம். அழகான காளி என்பதால் அங்காள அம்மன்.

திருமண பாக்கியம் புத்திர பாக்கியம் நோய்கள் அகலுதல் தீர்க்காயுள் தொழிலில் விருத்தி குடும்ப ஒற்றுமை பொன் பொருள் சேர்க்கை என கேட்டது அனைத்தையும் குறைவின்றி தருகிறாள்.

உள் பிராகாரத்தில் வீரபத்திரர் பொன்முடி மகராசா வரசித்தி வினாயகர் ஆதிசக்தி சுப்ரமணியர் ஆகியோர் அருள்கின்றனர். வெளிப்பிரகாரத்தில் மாணிக்க வினாயகர் பைரவர் நவகிரங்கள் காசி விஸ்வனாதர் விசாலாட்சி பெரியாண்டவர் சன்னதிகளும் திருக்குளமும் உள்ளன.download (7)

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை அமாவாசை பௌர்ணமி கிருத்திகை சிறப்பு  நாட்கள். சித்திரை வருடப்பிறப்பு நவராத்திரி திருக்கார்த்திகை தனுர்மாதம் பொங்கல் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மகாசிவராத்திரியை ஒட்டி நடைபெறும் மயானக் கொள்ளை உற்சவம் இங்கே பிரம்மாண்டமாக நடக்கிறது. அது முடிந்த பிறகு ஆலய பிரம்மோற்சவம் துவங்குகிறது. பதிமூன்று நாட்கள்  நடைபெறும் இதில் முதல் மற்றும் கடைசி நாட்களில் அங்காள பரமேஸ்வரி புறப்பாடும் மற்ற நாட்களில் முருகன் வள்ளி தெய்வானையுடன் பல வாகனங்களில் புறப்பாடும் நிறைவு நாளில் சந்தனக்காப்பும் ஊஞ்சல் அலங்காரமும் நடைபெறுகிறது. வரலாற்றாலும் வழிபாட்டாலும் சிறப்புப் பெற்ற சென்னை ராயபுரம் அங்காளம்மன் கோயிலுக்கு நீங்களும் ஒரு முறை சென்று வாருங்களேன்.

One thought on “அருவமாகக் காட்சி தந்த அங்காளி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s