பதினாறு பேறுகள் அருளும் அம்மன்

download (1)

ஆதி காலத்தில் மனிதர்கள் இயற்கையை வழிபட்டு வாழ்ந்துள்ளார்கள். இன்றும் சில இடங்களில் இயற்கையை இறைவனாக வழிபடுகிறார்கள். குறிப்பாக மரங்களை வழிபடுவது நடைமுறையில் உள்ளது.download (3)

பஞ்ச பூத தத்துவத்திற்கு ஏற்ப மரங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் முறையே மாமரம் அருகம்புல் வாழை வேம்பு வெற்றிலை அதில் நீர் தத்துவத்தில் உள்ள மாமரத்தில் அமர்ந்து நீடாமங்கலம் என்னும் ஊரில் அருளாசி வழங்குகிறாள் அன்னை யமுனாம்பாள் அவள் இந்த ஊரில் குடிகொண்டது ஒரு சுவாரசியமான கதை.download (4)

சுமார் 17ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னர் சரபோஜி தன் மனைவி யமுனாபாயுடன் திருவிச நல்லூரில் வாழ்ந்த மகான்  ஸ்ரீதரவேங்கடேச ஐயர்வாள் சுவாமியிடம் ராம நாம தீட்சை பெற்று சதாசர்வ காலமும் ராம நாமத்தை ஜபித்து வந்தார்.

மகாராணி யமுனாபாய் என்கிற யமுனாம்பாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது அவர்களூக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மாமரத்தில் மெய்ப்பொருளாம் இறைவனை தனக்கு உறுதுணையாக எண்ணி அம்மெய்பொருளோடு மாமரத்தில் இரண்டறக் கலந்துவிட்டார். அவர்களின் வழியில் வந்த மராட்டிய மன்னர்கள் அந்த மாமரத்தையே இறைவனாக நினைத்து வழிபட்டு தங்கள் வம்சத்தின் புத்திரதோஷம் நீங்கப் பெற்றனர்.download (6)

மராட்டிய மன்னர்களில் ஒருவரான பிரதாபசிம்ம மகாராஜா இவ்வூருக்கு யமுனாம்பாள்புரம் என்று பெயரிட்டார். புத்திரபாக்கியம் அருளும் சந்தானராமர் ஆலயத்தை நிறுவியும் பூஜை கைங்கர்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு குடியிருப்பு வசதியும் அருகில் உள்ள கிராமத்தில் விளை நிலங்களையும் வழங்கினார்.download (5)

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் யமுனாபாபுரி நீ வசந்தம் என்று போற்றியுள்ளார். காலப்போக்கில் இவ்வூர் நீடாமங்கலம் என மறுவியது. அதன் பிறகு ஊர்மக்கள் மாமரத்திற்கு முன்பாக ஒரு ஆலயம் அமைத்து ஒரு கையில் படியுடன் கூடிய அம்பாள் விக்ரகத்தை நிறுவி வழிபட்டு வந்தனர். 1972ல் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தில் அந்த மாமரம் முறிந்தது. பின்னர் மீதமிருந்த மாமரத்தை செப்புக்கவசம் இட்டு இன்றும் வழிபட்டு வருகின்றனர். தனிச்சன்னதியில் ராஜ வினாயகர் அருள்கிறார்.download (2)

நான் சுமார் பத்து வயதாக இருக்கும்போது என் தாய்வழி பாட்டியுடன் இந்த ஊருக்குப் போனது இதைப் படிக்கும்பொழுது ஞாபகம் வந்தது. என் பாட்டியின் பிறந்த ஊர் ஆலங்குடி. அங்குபோனபோது மாட்டு வண்டியில் ஆடி ஆடி அசைந்து போனது இன்னமும் நினைவிலாடுகிறது. அப்போதெல்லாம் பக்தி ரொம்ப தெரியாது. ஆனால் பாட்டி அழைத்துச் செல்லும் இடமெல்லாம் அதைப் பற்றி சொல்லும் கதைகளைக் கேட்க ரொம்பப் பிடிக்கும்  இந்தக் கதையையும் அவர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.images

வேண்டும் வரத்தை வேண்டியபடி அருளும் கருணை உள்ளம் மிக்க அன்னை யமுனாம்பாளை  திருமண பாக்கியம் தீர்க்கசுமங்கலி பாக்கியம் புத்திர பாக்கியம் சுகப்பிரசவம் கல்வி மேம்படவும் அரசு மற்றும் அரசியல் ரீதியான பதவி உயர்வுகள் உள்பட பதினாறு விதமான பாக்யங்களையும் வேண்டி வழிபட்டு பயன் அடைந்தவர்கள் ஏராளம்download

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து சுமார் 11 கி மீ தொலவிலும் ஆலங்குடி குரு தலத்திலிருந்து சுமார் 4 கி மீ தொலைவிலும் இந்த ஆலயம் உள்ளது.

3 thoughts on “பதினாறு பேறுகள் அருளும் அம்மன்

 1. அன்னை யமுனாம்பாள் பற்றிய கதை நம் முன்னோர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்ததைச் சொல்லுகிறது. சுவாரஸ்யமான கதை.

  கதையை தொடர்ந்து வரும் தகவல்கள் நிறையப் பேர்களுக்குத் தெரியாது. அந்தக் காலத்து பாட்டிமார்கள் இதுபோன்ற பல தகவல்களை சொல்லுவார்கள். இவைகளை இங்கு பதிவு செய்வதால் பல சரித்திர நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வருகிறது. உங்களது இந்தப் பணி மிகவும் பாராட்டுக்குரியது.
  தகவல்களை அள்ளி வழங்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

  1. அன்புள்ள ரஞ்சனி
   நலம் நலம் காண ஆவல். என் ஒன்றுவிட்ட மைத்துனர் இறந்து இன்று சுபம். இவர்
   பத்துக்கு மும்பை போய்விட்டு நேற்றுத்தான் வந்தார். என் சின்ன பெண்ணின்
   மாமனார் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார் கொஞ்சம் நிலமைக்
   கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பதிவில்
   உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். சந்தோஷம் என்ன இருந்தாலும் குரு தோள்தட்டி
   சபாஷ் எனும் போது இருக்கும் மகிழ்ச்சியே தனிதான். நன்றி. காலத்தை கடத்த
   நிறைய எழுதுகிறேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் இன்று சிவராத்திரி
   காலையில் பாபா கோவிலுக்கு போய் வந்தேன். அனைவருக்காகவும் பிரார்த்தனை
   செய்து வந்தேன். ஆத்தில் எல்லோரையும் கேட்டதாகச் சொல்லவும்
   அன்புடன்
   விஜயா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s