ஸ்ரீ ராம ஜென்ம பூமி

download (2)
அயோத்தி ………………. உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் இருந்து 136 கி மீ தொலைவில் உள்ளது ஸ்ரீ ராம ஜென்ம பூமியான அயோத்தி. பைசாபாத் நகருக்கு ஏழு கி மீ தூரத்தில் உள்ளது. இங்கே அதிக பட்ச பாதுகாப்பு போட்டிருக்கிறார்கள். வைகுண்டத்தின் ஒரு பகுதியான அயோத்தியை மனு பூவுலகம் கொண்டு வந்து சரயூ நதியின்  தெற்குக் கரையில் நிருவியதாகப் புராணங்கள் சொல்கின்றன. சிலர் ஆயுத் என்ற மன்னரால் நிறுவப்பட்ட நகரம் என்பதால் அயோத்தி என்ற பெயர் வந்தது என்கிறார்கள். அதர்வண வேதத்தில் அயோத்தி நகரம் தேவர்களால் சிருஷ்டிக்கப்பட்டது. ஸ்வர்க்கத்துக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது. குப்தர்கள் காலத்தில் அயோத்தி மிகப் பெரிய வணிகமையமாகத் திகழ்ந்திருக்கிறது. புத்தர் அயோத்திக்கு வருகை புரிந்திருப்பதாகவும் நம்பப் படுகிறது, சீன யாத்ரிகரான பாஹியான் அயோத்தி பற்றி குறிப்புக்கள் எழுதியுள்ளார்.download (1)
இந்து. பௌத்தம். ஜைனம் இஸ்லாம் வழிபாட்டுத் தலங்களும்      அயோத்தியில் இருக்கின்றன. ஸ்ரீராமன் ஆலங்கள் மற்றும் மடங்களை எடுத்துக்கொண்டால் அவை நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. ஆண்டின் 365 நாட்களும் இரவு பகலாக இங்கே இடைவிடாமல் ராம நாமம் ஜபிக்கப்படுகிரது.download
ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ராமரை ” ராம்லாலா” என்கிறார்கள். காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் திறந்திருக்கும். மீண்டும் இரண்டு மணிக்கு திறக்கிறார்கள். நீண்ட வரிசையில் வளைந்து நெளிந்து நகர்ந்துகொண்டே வருகையில் திடீரென்று ராம ஜென்ம பூமி இதுதான் சேவித்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அங்கே ராணுவப் பாதுகாப்புடன் திருவுருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. குழந்தை வடிவில் ராமர் அருளுகிறார். 27 அங்குல உயரம் இருக்கும் இந்தத் திருவுருவம் பளிங்கினால் செய்யப்பட்டு தங்கத்தால் இழைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சந்திர தேஷ் பாண்டே என்பவர் என்கிறார்கள். பல்லக்கு ஈட்டி மரத்தால் செய்யப்பட்டு இருக்கிறது.download (3)
பலரும் 108 வைணவத் தலங்களில் ராமஜென்ம பூமி ஒன்று என நினைக்கின்றனர். ஆனால் ராம ஜென்ம பூமி அமைந்துள்ள இடம் வேறு. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக அயோத்தியில் ராமர் கோவில் கொண்டுள்ள இடம் வேறு. இரண்டாவதாக சொல்லப்பட்டதை “அம்மாசி மந்திர்” என்றால்தான் உள்ளூர்வாசிகளுக்குத் தெரிகிறது. ஆகா அயோத்தியில் தரிசிக்க வேண்டிய மிக முக்கியமான இடங்கள் இவை இரண்டும். அயோத்தியில் கோடையில் மிகவும் வெப்பமாகவும் குளிர்காலத்தில் குளிர் அதிகமாகவும் இருக்கும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தின் ஆரம்பம் வரை அயோத்தி செல்ல ஏற்ற காலம்.
Advertisements

2 thoughts on “ஸ்ரீ ராம ஜென்ம பூமி

  1. நான்கு வருடங்களுக்கு முன் இங்கு போய்விட்டு வந்தோம். சரயு நதியில் தினமும் நீராடி…இந்த அம்மாஜி மந்திரில் தான் தங்கினோம். ஒரு வாரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராம நவமியை அங்கு 5 நாட்கள் பிரம்மோத்சவம் ஆக கொண்டாடுகிறார்கள்.
    ராம ஜன்ம பூமியையும் பார்த்தோம். புதிதாக ராமன் கோவில் கட்டினால் எப்படி இருக்கும் என்றும் பார்த்தோம்.
    புதிய கோவிலுக்கு வேண்டிய ஒவ்வொரு கல்லும், தூண்களும் தயாராக இருக்கின்றன. சீக்கிரம் கோவில் வரவேண்டும் மீண்டும் அயோத்தி போய் ராமனை சேவிக்க வேண்டும்.
    நிறைய தகவல்களுடன் நல்ல பகிர்வு!

  2. பின்னோட்டத்தில் ஒரு சின்ன பதிவு எழுதிவிட்டீர்களே பலே பலே ரொம்ப நன்றி ரஞ்சனி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s