1970 ம் ஆண்டு காலை எட்டு மணி தாத்தா பூஜை அறையில் பூஜை செய்துகொண்டிருப்பார் அம்மாவும் சித்தியும் சமையல்கட்டில் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சமைத்துக்கொண்டிருப்பார்கள் அப்பா அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருப்பார். பாட்டி கல்சட்டி நிறைய பழைய சாதத்தை தயிர் விட்டு பிசைந்து தொட்டுக்கொள்ள மாங்காய் ஊறுகாய் அல்லது மாவடு கொண்டுவந்து கூடத்தில் உட்கார்ந்து எனக்கும் என் தம்பி தங்கைகளுக்கும் கிராமத்திலிருந்து படிக்க வந்திருந்த அவரின் தம்பி குழந்தைகள் இருவர் என அனைவருக்கும் கையில் உருட்டி போடுவார் கீச்சு மூச்சு என்று பேசிக்கொண்டே இரண்டு வாய் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு பையை எடுத்துக்கொண்டு கல்லூரி பள்ளி என எல்லோரும் ஒரே நேரத்தில் கிளம்பி விடுவோம்.
2013. ம் வருடம் காலை எட்டு மணி அறையை விட்டு வெளிவர முடியாத என் மாமியாருக்கு ஓட்ஸ் கஞ்சி ஒய்வு பெற்று விட்டதால் எப்போதுமே ஓய்வாக இருக்கும் என் கணவருக்கு பேப்பர் படிக்கம் இடத்திற்கே அவரது டிபன் . உலகில் பிரிக்க முடியாத இரண்டு பொருட்கள் எவை என்றால் அது என் பிள்ளையும் அவனது கணினியும் எனவே அவன் இருக்கும் அவது அறைக்கே செல்லும் அவனுக்குப் பிடித்த நூடுல்ஸ்
ஆரோக்கியத்தில் குறியாக இருக்கும் என் மாட்டுப் பெண்ணிற்கு கேலாக்ஸும் பாலும்.. இரவு 11 மணிவரை கணினி தொலைக்காட்சி என்று பிசியாக இருந்த என் செல்லப் பெண் காலை எட்டு மணிக்குத்தான் டிபன் அவளது அறையில் ஆறிக்கொண்டிருக்க அவசர அவசரமாக தனது மேட்ச்ங் கிளிப் காதணிகளைத் தேடிக் கொண்டிருப்பாள் இதற்கு இடையில் 8.30 வரும் பள்ளி வேனில் திணித்து அனுப்ப என் பேரனுக்கு வீடெங்கும் அலைந்து உணவைத் திணிக்க வேண்டும் . அமர்க்களமெல்லாம் ஓய்ந்து ஆறு பேர் உட்கார்ந்து சாப்பிடும் மேஜையில் நான் மட்டுமே உட்கார்ந்து டிபன் சாப்பிடும்போது என் கணவர் பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்ட்சியில் தேனும் பாலும் நிகழ்ச்சியில் ” புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ” என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது புதிய காலம் அதுவும் கலிகாலம் என நினைத்துக் கொண்டு பாக்கி வேலைகளை கவனிக்கக் கிளம்பினேன்.
வேறு வழியில்லை… மனதிற்கு பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே வேலைகளை தொடர வேண்டியது தான்…
http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Moon-Blossom.html
உண்மை காலத்தோடு நாமும் மாறத்தான் வேண்டியுள்ளது
அந்த நாள் நிதானமான வாழ்க்கையையும், இந்த நாளின் அவசர வாழ்வையும் நன்றாக ஒப்பிட்டு இருக்கிறீர்கள். நாமும் அதற்குத் தகுந்தாற்போல மாறி விட்டோம், பாருங்கள்!
மாறினால் தானே அவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுத்து வாழ முடியும் மிகவும் நன்றி ரஞ்சனி