தனக்கே ஆயிரம் பிரச்னைகள் இருக்க மற்றவர் பிரச்னைகளிலும் தலையிட்டு அவர்களை மேலும் குழப்பும் சந்தர்ப்பம் சிலருக்கே வாய்க்கும் அப்படியான் ஒரு பொக்கிஷ தருணம் அன்று வாய்த்தது. இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் ” வாரக் கடைசிதானே வாடா ஒரு சினிமாவிற்கு போய்விட்டு வரலாம் என்றால் மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வருகிறேன் ” என்கிறான் என்று கேலி செய்தார் ஒரு நண்பர். ” இதுலே கேலி பண்ணதற்கு என்ன இருக்கு மனைவி சொல்லே மந்திரம்? என்றேன் நான்
பூலோகத்திலே மட்டுமல்ல தேவலோகத்திலும் மனைவிக்குத்தான் முதலிடம். சிவனார் தன உடம்புன் இடப்பகத்ஹ்டிலும் விஷ்ணு தன மார்பிலும் பிரம்மன் தன நாவிலும் மனைவிக்கு இடம் கொடுத்திருக்காங்கன்னா பார்த்துக்கோங்க இன்னொரு தகவலும் சொல்றேன் கேட்டுகோங்க
ஒருத்தனுக்கு நான்கு புருஷார்த்தங்கள் அவசியம்னு புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கு அவை மோட்சம் அர்த்தம் காமம் தருமம் மோட்சம் என்பது இறைவனின் திருவடியைப் பற்றிக்கொள்ளும் மேலான தகுதி. அர்த்தம் பொன் பொருள் சேர்ப்பதைக் குறிக்கும். காமம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வது தர்மம் நாம் செய்யும் தான தருமகளைக் குறிக்கும். இதுல மோட்சமானது பூர்வ ஜன்மத்துக் கொடுப்பிலை இருந்தால்தான் வாய்க்கும். அது நம்ம கையில இல்லையாம் சரி ……….. மத மூனும் அவற்றில் இரண்டை இழந்தால்தான் ஒன்று கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.
அதாவது ஒருத்தன் பொருள் சேர்க்கணும்னு நினைத்தால் தான தர்மம் செய்வதோ நமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதோ இயலாமல் போகும். தன விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைந்தால் அர்த்தமும் தருமமும் அடிபட்டுப் போகும்/ அதே போன்று தருமத்தில் நாட்டமுள்ளவனுக்கு காமமும் அர்த்தமும் வாய்க்காமல் போகும்
“அப்படின்னா அர்த்தம் காமம் தர்மம் இந்த மூன்றும் ஒருசேர ஒருத்தனுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லையா? நீ என்னடான்னா நாலு புருஷார்த்தங்களும் அவசியம்கிரே பின்னே எப்படி?” என்றார்கள் நண்பர்கள்
அதைத்தான் சொல்ல வரேன் ஒருத்தனுக்கு குணவதியான மனைவி அமைந்தால் மேலே சொன்ன மூனும் வாய்க்குமாம். குணவதியான மனைவியானவள் தகுந்த நேரத்தில் நம்மைச் சேமிக்க வைப்பாள். அர்த்தம் நிறைவேறும் நமது விருப்பத்தை நிறைவேர்ரிவும் துணை புரிவாள். காமம் வாய்க்கும் இல்லாள் நல்லாளால் இருக்கும்போது நமது தான தருமத்துக்கும் குறைவிருக்காது. ஆகா குணவதியான மனைவி அமைந்தால் குடும்பமே கோவிலாகும் புரிஞ்சுதா? என்றேன்
நான் பேசி முடித்ததும் கேலிக்கு உள்ளான நண்பர் ” நல்லா புரிஞ்சுதுப்பா இவனுக்குப் புத்தியில் உரைக்கிற மாதிரி அருமையான தகவலைச் சொல்லியிருக்கே மனைவியோட மகத்துவம் அறிஞ்சவன் நான் உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? கல்யாணம் ஆகி 16 வருஷம் ஆகுது இதுவரைக்கும் என் மனைவியை ஒரு தடவை கூட கைநீட்டி அடிச்சதில்லை ” என்றார் பெருமிதமாக
உடனே அடுத்த நண்பர் சொன்னார் ” அட இதென்ன பிரமாதம் எனக்குக் கல்யாணம் ஆகி 21 வருடம் ஆகுது இதுவரைக்கும் ஒரு தடவை கூட என் மனைவியை திருப்பி அடிச்சதில்லை தெரியுமா?”
ஹா… ஹா… முடிவில் நல்ல ஜோக்…
அருமையாக மனைவியின் புகழை எழுதிக் கொண்டே வந்துவிட்டு, கடைசியில் போட்டீங்களே ஒரு போடு!
பாராட்டுகளுக்கு நன்றி ரஞ்சனி